விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் அமைந்துள்ள வீரவாழியம்மன் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. நாட்டு மக்கள் நோய் நொடி இல்லாமல் நலமாக வாழவும், பள்ளி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும், தொழில் வளர்ச்சி அடையவும் அம்மனுக்கு விசேஷ பூஜைகள் செய்யப்பட்டன.சந்தனகாப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் ஆலயத்திற்கு வந்து சாமி தரிசனம் செய்து, புதிய ஆண்டு சிறப்பாக அமைய வேண்டும் என பிரார்த்தனை செய்தனர். பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

















