திருவள்ளூர் அருகே 100 ஆண்டுகள் பழமையான கௌடி தேவாலயத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு ஆராதனையில் ஏராளமானோர் பங்கேற்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
ஆங்கில புத்தாண்டையொட்டி 100 ஆண்டுகள் பழமையான திருவள்ளூர் சி.எஸ்.ஐ கௌடி தேவாலயங்களில் நள்ளிரவில் 12 மணிக்கு புத்தாண்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். பின்னர் அனைவரும் புத்தாண்டு வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். முன்னதாக தேவாலயத்தில் ஆயர்கள் புதிய ஆண்டில் இறையாசீருடன் வாழ கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி நின்றபடி மக்களுக்கு நற்கருணை ஆசீர் வழங்கி சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றி ஒவ்வொருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

















