குமரி மாவட்டத்தில் கல்வித்துறையில் தூய்மை பணியாளர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் தங்களுக்கு பண பலன்கள் வழங்க கோரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வேலைவாய்ப்பு மையம் மூலம் 1980 களில் துப்புரவு பணியாளர்களாக நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியாற்றினர். பகுதிநேர ஊழியர்களுக்கான ஊதியத்திலே பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர். பிற பணியாளர்களுக்கு வழங்கியது போல் பணிவரன்முறைப்படுத்தி தங்களுக்கும் பணபலன்களை வழங்க வேண்டும் பென்சன் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 25 கும் மேற்பட்ட முதியோர் நாகர்கோவிலில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர் கடந்த மூன்று ஆண்டுகளாக இவர்களுக்கு வழங்க வேண்டிய பணபலன்கள் மறுக்கப்பட்டு வருகிறது இது தொடர்பாக நீதிமன்றம் சென்று நீதிமன்ற ஆடை பிறப்பித்த பின்பும் இவர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் வழங்கப்படாமல் உள்ளது இதனை கண்டித்து உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று நாகர்கோவிலில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம் முன்பு சுமார் 25 பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் ,
இதனைத் தொடர்ந்து சம்பவ இடம் வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

















