June 28, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அமைச்சரின் பெயரைச் சொல்லி மிரட்டல் முதல் வேலுநாச்சியார் பெயர் பலகை வரை திண்டுக்கல் குறைதீர் கூட்டத்தில் குவியும் புகார்கள்

by sowmiarajan
December 30, 2025
in News
A A
0
அமைச்சரின் பெயரைச் சொல்லி மிரட்டல் முதல் வேலுநாச்சியார் பெயர் பலகை வரை திண்டுக்கல் குறைதீர் கூட்டத்தில் குவியும் புகார்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள தியாகி சுப்பிரமணிய சிவா மாளிகையில், மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) ஜெயபாரதி தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் 327 கோரிக்கை மனுக்களை அளித்தனர். இக்கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய கள ஆய்வு நடத்தி, தகுதியான கோரிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற அதிகாரிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார். குறிப்பாக, திருப்பூர் மாவட்டம் ஓடக்காடு பகுதியைச் சேர்ந்த கோதை நாச்சியார் என்பவர் அளித்த மனு கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல்லைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவர், ரெட்டியார்சத்திரத்தில் உள்ள தங்களது நிலத்தை கிரையம் பெற்றதோடு, பல கோடி ரூபாய் முதலீடு பெற்று மோசடி செய்ததாகவும், பணத்தைத் திரும்பக் கேட்டால் ஆளுங்கட்சி அமைச்சர்களுடன் தமக்கு நெருங்கிய செல்வாக்கு இருப்பதாகக் கூறி கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அமைச்சரின் பெயரைப் பயன்படுத்தி நடைபெறும் இத்தகைய மிரட்டல்கள் குறித்து முறையான விசாரணை நடத்தி, தங்கள் நிலத்தையும் முதலீட்டையும் மீட்டுத் தர வேண்டும் என அவர் உருக்கமுடன் கேட்டுக்கொண்டார்.

அடிப்படை வசதிகள் மற்றும் கிராமப்புறப் பிரச்சினைகள் சார்ந்து பல்வேறு கிராம மக்கள் திரண்டு வந்து முறையிட்டனர். பாலகிருஷ்ணாபுரம் பி.காப்பிளியப்பட்டி கிராம மக்கள், தங்கள் ஊரில் பல ஆண்டுகளாகச் சிதிலமடைந்து இடியும் நிலையில் உள்ள பழைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியால் உயிருக்கு ஆபத்து நிலவுவதாகக் கூறி, அதனை அகற்றவும், பயன்பாட்டிற்கு வராமல் முடங்கிக் கிடக்கும் புதிய தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும் வலியுறுத்தினர். அதேபோல், வடமதுரை செங்குளத்துப்பட்டி கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு மத்தியில் மயானம் அமைக்க முயற்சி நடப்பதாகக் கூறி, அதனைத் தடுத்து நிறுத்தக் கோரி அக்கிராம மக்கள் முறையிட்டனர். நிலக்கோட்டை தாலுகா மட்டப்பாறையைச் சேர்ந்த மகேஷ்வரன் என்ற தற்காலிக அரசுப் பள்ளிப் பணியாளர், தனது மாற்றுத்திறனாளி மகனைத் தோளில் சுமந்து வந்து, வறுமையின் காரணமாக மகனின் மருத்துவச் செலவுகளை ஈடுகட்ட முடியாமல் தவிப்பதாகவும், தனது பணியை நிரந்தரம் செய்து வாழ்வாதாரம் காக்க வேண்டும் எனவும் கண்ணீர் மல்க மனு அளித்தார்.

ஆர்ப்பாட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு போராட்டங்களுக்கு மத்தியில், திண்டுக்கல் வேலுநாச்சியார் சேனை அமைப்பினர் ஒரு வினோதமான போராட்டத்தை முன்னெடுத்தனர். வேலுநாச்சியார் வேடமணிந்த சிறுமிகளுடன் வந்து மனு அளித்த அவர்கள், ஆட்சியர் அலுவலக வளாகத்தின் நுழைவாயிலில் முன்பு இருந்த ‘வேலுநாச்சியார் வளாகம்’ என்ற பெயர் பலகை, கட்டிடப் புதுப்பிப்புப் பணிகளின்போது அகற்றப்பட்டதைச் சுட்டிக்காட்டினர். வீரமங்கை வேலுநாச்சியாரின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் அந்தப் பெயர் பலகையை மீண்டும் நிறுவ வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும், ஏ.வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பவர், தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்த தனது மாற்றுத்திறனாளி மகள் லின்சியாவின் வீட்டின் மேல் செல்லும் உயர்மின் அழுத்தக் கம்பிகளை மாற்றியமைக்கக் கோரிப் பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் அலைக்கழிப்பதாக வேதனையுடன் தெரிவித்தார். விளையாட்டுத் துறையில் சாதிக்கும் வீராங்கனைக்கே இந்நிலை நீடிப்பது வேதனையளிப்பதாகக் கூறி உரிய நடவடிக்கை எடுக்க அவர் வலியுறுத்தினார்.

Tags: complaints velugrievanceministernameplate dindigulthreats
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கோரிக்கைகளை வென்றெடுக்க திண்டுக்கல்லில் அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் கூட்டமைப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

Next Post

திண்டுக்கல் பிரபல நகைக்கடையில் ஊழியர்களே கைவரிசை – ரூ.1.43 கோடி மதிப்பிலான தங்கம் திருட்டு

Related Posts

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்
News

June 26, 2026
கன்னியாகுமரி காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை

திருவள்ளூர் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கிய நபர்

திருவள்ளூர் நகராட்சி கூட்ட அரங்கில் முதலமைச்சரின் புகைப்படம் வைப்பதில் DMK உறுப்பினர்கள்  வாக்குவாதம் 

திண்டுக்கல் பிரபல நகைக்கடையில் ஊழியர்களே கைவரிசை - ரூ.1.43 கோடி மதிப்பிலான தங்கம் திருட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.