• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

டெல்லியில் அமித் ஷா உடன் 20 நிமிடங்கள் ஆலோசித்த ஓபிஎஸ்..!

by Priscilla
December 3, 2025
in News
0
டெல்லியில் அமித் ஷா உடன் 20 நிமிடங்கள் ஆலோசித்த ஓபிஎஸ்..!
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

அதிமுக உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பை உருவாக்கியுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இதுவரை அங்கம் வகித்து வந்த ஓபிஎஸ், தமிழகத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாஜக–அதிமுக கூட்டணி மீண்டும் உருவானதை எதிர்த்து கூட்டணியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.

மேலும், பிரதமர் மோடி தமிழகம் வருகை தந்தபோது நேரம் கேட்டும் சந்திப்பு கிடைக்காதது ஓபிஎஸின் அதிருப்தியை அதிகரித்ததாக தகவல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் நடத்திய சமரச முயற்சிகளும் பயனின்றி முடிந்தது.

இந்த சூழலில், கடந்த 24 ஆம் தேதி வேப்பேரியில் நடைபெற்ற அதிமுக உரிமை மீட்பு குழு கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், டிசம்பர் 15ஆம் தேதி முக்கிய தீர்மானம் அறிவிக்கப்படும் என்று கூறி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாகவே, பாஜகவின் அழைப்பின் பேரில் தனது மகனுடன் டெல்லி சென்ற ஓபிஎஸ், அமித் ஷாவை நேரில் சந்தித்து தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து ஆலோசித்துள்ளார். டெல்லியில் தங்கியுள்ள அவர், பாஜக மற்றும் தேசிய அளவிலான பிற தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்புகளின் பின்னர், ஓபிஎஸ் தனது அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக அறிவிப்பார் என்பது அரசியல் வட்டாரங்களில் நிலவும் எதிர்பார்ப்பு.

Tags: admkAMIT SHAHbjpedapadi palanisamyo pannerselvamtn politics
Previous Post

இன்று இரவுடன் மழை குறைய வாய்ப்பு !

Next Post

Ind vs SA | 2 ஆவது ஒரு நாள் போட்டியில் முக்கிய மாற்றம்?

Related Posts

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி
News

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

நாகையில் ரூ.100-க்கு சிறப்பு காய்கறித் தொகுப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம் விற்பனை படுஜோர்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

திருமுல்லைவாயில் அய்யா வைகுண்டர் ஆலயம் அரசு நிலத்தில் இருப்பதால் ஆவடி மாநகராட்சி சார்பாக நோட்டீஸ்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆவடி அருகே தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

முதல்வர் பயணத்தை எதிர்கட்சியினர் அரசியலாக்குகின்றனர் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் பேட்டி

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

செங்கல்பட்டு வெயிலுடன் கூடிய திடீரென கனமழை பொதுமக்கள் அவதி

November 5, 2026
Next Post
Ind vs SA | 2 ஆவது ஒரு நாள் போட்டியில் முக்கிய மாற்றம்?

Ind vs SA | 2 ஆவது ஒரு நாள் போட்டியில் முக்கிய மாற்றம்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி
News

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

நாகையில் ரூ.100-க்கு சிறப்பு காய்கறித் தொகுப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம் விற்பனை படுஜோர்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

திருமுல்லைவாயில் அய்யா வைகுண்டர் ஆலயம் அரசு நிலத்தில் இருப்பதால் ஆவடி மாநகராட்சி சார்பாக நோட்டீஸ்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆவடி அருகே தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

by Satheesa
November 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6