வங்கக்கடலில் உருவான டித்வா புயல் காரணமாக கடந்த 24 மணி நேரத்துக்கு மேலாக இடைவிடாது மழை பெய்து வருகிறது இதனால் பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது மயிலாடுதுறை மாவட்டத்தில் சரியாக 117 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட செம்பனார்கோவிலில் மாவட்டத்தில் அதிகபட்சமாக 173 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது தொடர்ந்து சாரல் மழை பெய்து வரும் நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தளமான தரங்கம்பாடி டேனிஷ் கோட்டைக்கு எதிரே உள்ள மணல் வளாகத்தில் குலம் போல் மழை நீர் தேங்கியுள்ளது மேலும் தரங்கம்பாடி கடற்கரையில் அலையின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது அலைகள் 10 அடிக்கு மேல் எழும்பி கரைகளை நோக்கி சீறி பாய்ந்து வருகிறது இதனால் ஒரு வாரத்திற்கு மேலாக இப்பகுதிகளை சார்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை மேலும் கடல் அலைகள் கடுமையான சீற்றத்துடன் காணப்படும் நிலையில் இன்று காலை முதலே ஒரு சில பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குழந்தைகளுடன் கடற்கரைக்கு வந்திருந்து ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுத்து செல்கின்றனர் மேலும் இப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.















