மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியை, பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டார். இதனால், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், உண்மையிலேயே ஆபத்தனதாகிவிட்டது என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.
மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்த, ரிங்கு தராஃப்தார் என்ற ஆசிரியை, வாக்குச்சாவடி நிலை அலுவலராக செயல்பட்டு வந்தார். அவர் பணிச்சுமை காரணமாக, கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், இன்னும் எத்தனை உயிர்களை நாம் இழக்க வேண்டும்?, உண்மையிலேயே, எஸ்.ஐ.ஆர். பணி ஆபத்தானதாகிவிட்டது என தெரிவித்துள்ளார்.













