November 14, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஒரு நாடு தழுவிய கலை, கைவினை &இலக்கியப் போட்டியான SPLASH 2025 நிகழ்வு ஆக்சிஸ் பேங்க் ஊக்குவிக்கிறது

by Satheesa
November 4, 2025
in News
A A
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சென்னை, November 03, 2025: இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் பேங்க், கலை, கைவினை மற்றும் இலக்கியம் குறித்த அதன் வருடாந்திர நாடு தழுவிய  போட்டியின் 13வது நிகழ்வான  ‘ஸ்ப்ளாஷ் 2025‘ இன் தொடக்கத்தை அறிவித்துள்ளது. ஆக்சிஸ் பேங்க் இன் ‘ திறந்த மனது ‘ (dil se open) எனும் வர்த்தக தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆண்டின்’கனவுகள்’ எனும் கருப்பொருள், இளைஞர்களை தங்கள் கற்பனை மற்றும் படைப்புத் திறனை வெளிப்படுத்த ஊக்குவிக்கும். பங்கேற்பாளர்கள் 31 டிசம்பர் 2025 வரை இணையதளத்தில் பதிவு செய்து தங்கள் படைப்புகளை சமர்ப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்சிஸ் பேங்க் கிளைகள், பள்ளிகள் மற்றும் குடியிருப்பு நல சங்கங்களில் (RWA) நேரடி போட்டிகளையும் இந்த வங்கி நடத்த உள்ளது. இந்த முயற்சி நேரடி மற்றும் டிஜிட்டல் தளங்கள் வழியாக இந்தியா முழுவதும் 11 லட்சத்திற்கும் அதிகமான பங்கேற்பாளர்களை ஈடுபடுத்த நோக்கம் கொண்டுள்ளது.

7 முதல் 10 வயது குழந்தைகளுக்கான துணைத் தலைப்பு: என் கனவு வாழ்க்கையில் ஒரு நாள்’ மற்றும்11 முதல் 14 வயது குழந்தைகளுக்கான துணைத் தலைப்பு: ‘நான் கனவு காணும் எதிர்காலம்’. அமர் சித்ர கதா-வின் குழும கலை இயக்குனர் திரு. சேவியோ மாஸ்கரென்ஹாஸ், ரயான் இன்டர்நேஷனல் குழும நிறுவனங்களின் இயக்குனர் டாக்டர் ஸ்னேஹல் பிண்டோ, மற்றும் தி ஆர்ட் சொசைட்டி  ஆஃப் இந்தியா வின் கெளரவ துணைத் தலைவர் திரு. தீபக் பாடில் போன்ற குறிப்பிடத்தக்க ஆளுமைகள் உட்பட, 100 க்கும் மேற்பட்ட துறை நிபுணர்களைக் கொண்ட ஒரு நடுவர் குழு, சமர்ப்பிக்கப்பட்ட படைப்புகளை மதிப்பீடு செய்யும்.

இந்த13வது நிகழ்வை தொடங்கிவைத்த ஆக்சிஸ் பேங்க் இன் தலைவர் மற்றும் முதன்மை மார்க்கெட்டிங் அதிகாரி திரு. அனூப் மனோகர் கூறுகையில், “ஸ்ப்ளாஷ் என்பது ஒரு போட்டிக்கு   அப்பாற்பட்டது; இது குழந்தைகளின் மனதை உயர்த்தி அவர்களின் கற்பனையைத் தூண்டும் ஒரு படைப்பு தளமாகும். ஆக்சிஸ் பேங்க் இல், புதிய யோசனைகளை ஏற்றுக்கொள்வதிலும், படைப்பாற்றலை வளர்ப்பதிலும் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். குழந்தைகள் தங்கள் கனவுகளை வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்குவதன் மூலம்,  கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் எதிர்காலத்தின் தலைவர்களில் நாங்கள் முதலீடு செய்கிறோம். ஸ்ப்ளாஷ் -ன் மூலம், குழந்தைகள் நம்பிக்கை, தைரியம் மற்றும் அளவில்லா சாத்தியங்கள் நிறைந்த அவர்கள் உருவாக்க விரும்பும் ஒரு உலகத்தை  கனவு காண நாங்கள் ஊக்குவிக்கிறோம். கலை மற்றும் கற்பனை நம்பிக்கையை வளர்ப்பதிலும் புதுமைகளை ஊக்குவிப்பதிலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிற இந்த முயற்சி முழுமையான வளர்ச்சிக்கான எங்களின் உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கிறது.”என்று கூறினார் .

இந்தக் கருப்பொருளுக்கு ஏற்ப, ஆக்சிஸ் பேங்க், குழந்தைகளின் கனவுகளை உயிரோட்டமாக கொண்டு வர வடிவமைக்கப்பட்ட ‘AI டிரீம் ஜெனரேட்டர்’ என்ற ஒரு ஊடாடும் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. பறக்கும் கார்கள், பேசும் விலங்குகள் அல்லது சந்திரனில் ஒரு நகரத்தை உருவாக்குவது போன்ற கனவுகளைக் கண்டாலும், குழந்தைகள் தங்கள் கனவுகளில் நுழைந்து தங்களுக்குப் பிடித்த உபாயமான கலை, கைவினை அல்லது இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்து அவர்களின் கற்பனை உயிர்ப்பிக்கப்படுவதைக் காணலாம்.

ஆறு வெற்றியாளர்களுக்கும், ஆறு இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கும் முறையே தலா ₹1 லட்சம் மற்றும் ₹50,000 பரிசுத் தொகை வழங்கப்படும். துபாயின் தாஷ்கீலில் நடைபெறும் சிறப்பு கலை மற்றும் கைவினை கருத்தரங்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை அவர்கள் பெறுவார்கள். இந்த வெற்றியாளர்களின்   கலைப்படைப்புகள் பெங்களூருவில் உள்ள மியூசியம் ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி (MAP) இல் காட்சிக்கு வைக்கப்படும். கூடுதலாக, முதல் 400 தகுதியாளர்கள் இக்ஸிகோ மற்றும் அமெரிக்கன் டூரிஸ்டர் போன்ற கூட்டாளர் பிராண்டுகளிடமிருந்து அற்புதமான பரிசுகள் மற்றும் வவுச்சர்களை பெறுவார்கள்.

ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், முந்தைய SPLASH பதிப்பில் ஆக்சிஸ் பேங்க் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட நுழைவுகளைப் பெற்றது மற்றும் நாடு முழுவதும் 3,300 க்கும் அதிகமான பள்ளிகளை ஈடுபடுத்தியது. இந்த முயற்சி E4M  இந்தியன் டிஜிட்டல் மார்க்கெட்டிங் அவார்ட்ஸ் இல்  சிறந்த ஒருங்கிணைந்த ஊடக பிரச்சாரம் மற்றும் 14வது ACEF குளோபல் கஸ்டமர் எங்கேஜ்மென்ட் அவார்ட்ஸ் 2025 இல் படைப்பாற்றல் சிறப்பிற்கான வெண்கலம் ஆகிய இரண்டு மதிப்புமிக்க அங்கீகாரங்களைப் பெற்றது

 https://www.axisbanksplash.in/ 

Tags: Axis Bankmk stalinPromotesSPLASH 2025
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூர்  தண்டலை ஊராட்சி தியாகராஜர் நகர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், நேரில் பார்வையிட்டு ஆய்வு

Next Post

அப்போலோ ஆயுர்வைட் ஹாஸ்பிடல்ஸ், அதன் முதன்மை வசதியை சென்னை கிரீம்ஸ் சாலையில் தொடங்கியது

Related Posts

தரமான கல்வியுடன் மதிப்புணர்வை வளர்க்கும் ‘பாட்டி, தாத்தா தினம்’ விழா
News

தரமான கல்வியுடன் மதிப்புணர்வை வளர்க்கும் ‘பாட்டி, தாத்தா தினம்’ விழா

November 13, 2025
கோவை நகரை சிவப்பாக மாற்றிய சிஐடியு   ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உற்சாகப் பேரணி
News

கோவை நகரை சிவப்பாக மாற்றிய சிஐடியு   ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உற்சாகப் பேரணி

November 13, 2025
கரூரில் சிபிஐ சுற்றுச்சூழல் ஆய்வு –தேசிய முயற்சிக்கு வலுவான தொடக்கம்!”
News

கரூரில் சிபிஐ சுற்றுச்சூழல் ஆய்வு –தேசிய முயற்சிக்கு வலுவான தொடக்கம்!”

November 13, 2025
மழை மாயம் – தூத்துக்குடி உப்பு பனைகள் நீரில் மூழ்கி, உற்பத்தி 75% சரிவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தம்பி விஜய் உன் கட்சி வளர S I R உதவும் – தமிழிசை ஆலோசனை

தம்பி விஜய் உன் கட்சி வளர S I R உதவும் – தமிழிசை ஆலோசனை

November 13, 2025
1.500 ஆண்டுகள் பழமையான புத்த விஹாரத்தில் தீவிபத்து

1.500 ஆண்டுகள் பழமையான புத்த விஹாரத்தில் தீவிபத்து

November 13, 2025
சென்னை விமான நிலையத்தில் 30 கோடி ரூபாய் கஞ்சா பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் 30 கோடி ரூபாய் கஞ்சா பறிமுதல்

November 13, 2025
வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக தவெக ஆர்ப்பாட்டம் – அனுமதி கோரி மனு!

வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக தவெக ஆர்ப்பாட்டம் – அனுமதி கோரி மனு!

November 13, 2025
தரமான கல்வியுடன் மதிப்புணர்வை வளர்க்கும் ‘பாட்டி, தாத்தா தினம்’ விழா

தரமான கல்வியுடன் மதிப்புணர்வை வளர்க்கும் ‘பாட்டி, தாத்தா தினம்’ விழா

0
கோவை நகரை சிவப்பாக மாற்றிய சிஐடியு   ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உற்சாகப் பேரணி

கோவை நகரை சிவப்பாக மாற்றிய சிஐடியு   ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உற்சாகப் பேரணி

0
கரூரில் சிபிஐ சுற்றுச்சூழல் ஆய்வு –தேசிய முயற்சிக்கு வலுவான தொடக்கம்!”

கரூரில் சிபிஐ சுற்றுச்சூழல் ஆய்வு –தேசிய முயற்சிக்கு வலுவான தொடக்கம்!”

0
மழை மாயம் – தூத்துக்குடி உப்பு பனைகள் நீரில் மூழ்கி, உற்பத்தி 75% சரிவு!

மழை மாயம் – தூத்துக்குடி உப்பு பனைகள் நீரில் மூழ்கி, உற்பத்தி 75% சரிவு!

0
தரமான கல்வியுடன் மதிப்புணர்வை வளர்க்கும் ‘பாட்டி, தாத்தா தினம்’ விழா

தரமான கல்வியுடன் மதிப்புணர்வை வளர்க்கும் ‘பாட்டி, தாத்தா தினம்’ விழா

November 13, 2025
கோவை நகரை சிவப்பாக மாற்றிய சிஐடியு   ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உற்சாகப் பேரணி

கோவை நகரை சிவப்பாக மாற்றிய சிஐடியு   ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உற்சாகப் பேரணி

November 13, 2025
கரூரில் சிபிஐ சுற்றுச்சூழல் ஆய்வு –தேசிய முயற்சிக்கு வலுவான தொடக்கம்!”

கரூரில் சிபிஐ சுற்றுச்சூழல் ஆய்வு –தேசிய முயற்சிக்கு வலுவான தொடக்கம்!”

November 13, 2025
மழை மாயம் – தூத்துக்குடி உப்பு பனைகள் நீரில் மூழ்கி, உற்பத்தி 75% சரிவு!

மழை மாயம் – தூத்துக்குடி உப்பு பனைகள் நீரில் மூழ்கி, உற்பத்தி 75% சரிவு!

November 13, 2025

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.