September 15, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில்

by Satheesa
October 24, 2025
in Bakthi
A A
0
அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

கடலூர் மாவட்டம் திருமாணக்குழி என்னுமிடத்தில் அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில்,அமைந்துள்ளது.
மூலவர் சுயம்பு மூர்த்தி. இக்கோயில் சூரியபகவானால் உண்டாக்கப்பட்டு அவரே பூஜை செய்ததாக வரலாறு. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 228 வது தேவாரத்தலம் ஆகும்.

பிரகலாதனின் பேரன் மகாபலியின் தர்மநிலையை உலகிற்கு எடுத்துக் காட்ட மகாவிஷ்ணு விரும்பினார். எனவே காசிப மகரிஷிக்கும், அதிதேவிக்கும் 12வது குழந்தையாக வாமன பிரம்மசாரியாக மகாவிஷ்ணு அவதாரம் செய்தார்.

மகாபலியின் தர்மசிந்தனை குறித்த கர்வத்தை அடக்க மூன்றடி மண் கேட்டார்.ஒரு அடியால் பூமியையும், ஒரு அடியால் ஆகாயத்தையும் அளந்த பெருமாள், மூன்றாவது அடி எங்கே என கேட்டார்.

அதற்கு மகாபலி இந்த உலகை ஆளும் என்னையே அளந்து கொள்ளுங்கள் என விஷ்ணுவின் திருவடி முன் குனிந்தார். பக்திக்கு மெச்சிய திருமால் மகாபலியை சிரஞ்சீவிகளுள் ஒருவனாக்கினார். இப்படி மகாபலியை தர்மத்திற்காக விஷ்ணு அழித்திருந்தாலும் அதற்குரிய பழி திருமாலுக்கு ஏற்பட்டது.
இந்த பழியைப்போக்க திருமால் இங்கு வழிபட்டதால் இத்தலத்திற்கு “திருமாணிக்குழி’ என பெயர் ஏற்பட்டது.

மூன்று பிரகாரங்களுடன் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கோயில் பிரமாண்டமாக அமைந்துள்ளது. உள்பிரகாரத்தில் செல்வ விநாயகர், உதவி விநாயகர், ஆறுமுகர், 63 நாயன்மார்கள், சப்தமாதர்கள், பஞ்சமூர்த்திகள், யுகலிங்கங்கள், விஷ்ணு லிங்கம், சமயக்குரவர்கள், கஜலட்சுமி, நவக்கிரகம், பைரவர், சூரிய, சந்திரன் சன்னதிகள் உள்ளது. திரிசங்கு மகாராஜா, அரிச்சந்திரன் போன்ற சூரிய குல வம்சத்தினரால் இக் கோயில் சீரமைக்கப் பட்டுள்ளது.

தேவர்களுக்கு ஞானத்தை புகட்டவும், அவர் களது அஞ்ஞானத்தை நீக்கவும் சதா சர்வ காலமும் பார்வதியுடன் இணைந்திருப்பதால், இங்கு இறைவனை நேரிடையாக நாம் தரிசிக்க இயலாது. கர்ப்பகிரகமே இங்கு பள்ளியறையாக இருப்பதால் தனி பள்ளியறையும் கிடையாது.

சம்பந்தர் இத்தல இறைவனை பாடும் போது உயிரனை அனைத்தையும் உய்விக்கும் உதவிநாயகன் என பாடுகிறான். எனவே இறைவனுக்கு உதவிநாயகன் அம்மனுக்கு உதவி நாயகி என்ற பெயரும் உண்டு. மகாலட்சுமி தவம் செய்த நதியாக கெடிலமும், சரஸ்வதிதேவி சுவேத நதியின் வடிவில் கெடிலத்தில் சங்கமம் ஆகும் தல தீர்த்தமாகவும் விளங்குகின்றனர்.

பொதுவாக அனைத்து சிவன் கோயில்களிலும் பூஜை நேரத்தின் போது சிவலிங்கத்தை நாம் பார்த்து தரிசித்து கொண்டே இருக்கலாம். ஆனால் இத்தலத்தில் இரண்டு, மூன்று விநாடிகள் மட்டுமே சிவன் தரிசனம் தந்து விட்டு திரைக்குள் மறைந்து கொள்கிறார்.

இறைவனும் இறைவியும் இணைந்திருப்பதால் அவர்களுக்கு காவல் புரிவதற்காக 11ருத்ரர்களில் ஒருவரான “பீமருத்ரர்’ திரைச்சீலை வடிவில் உள்ளார்.
எனவே அவருக்குத்தான் முதல் அர்ச்சனை, பூஜை. அதன் பின் திரை நீக்கப்பட்டு ஒரு சில வினாடிகள் உள்ளிருக்கும் சுவாமியை பார்க்க பக்தர்களுக்கு அனுமதி தரப்படுகிறது.

விநாயகருக்கு மூஷிக வாகனம் எதிரில் இல்லாமல் அருகில் அமைந்துள்ளது விஷேஷம். துர்க்கையின் பாதத்திற்கு கீழ் எருமை தலை கிடையாது, கையில் உள்ள கரம் திரும்பி உள்ளதுடன் கதாயுதமும் தாங்கியிருக்கிறாள்.

சிவனின் எதிரில் உள்ள மண்டபத்தில் நான்கு வேதங்களும் நான்கு தூண்களாக அமைந்துள்ளன. திரைக்கு பின் அம்மனும், சுவாமியும் இருப்பதால் எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டி நந்தி நேர் திசையில் உள்ளது. வழக்கமான தலை சாய்த்த நிலை இல்லை. மதுரை, காஞ்சிபுரம், காசி, திருவாரூர், நாகப்பட்டினம் போன்று இங்கு அம்மனின் அம்புஜாட்சியின் ஆட்சி நடக்கிறது.

அம்மனின் இரண்டு கைகளிலும் பூ. ஒன்றில் தாமரை. மற்றொன்றில் நீலோத்பவம் இருக்கிறது. பூ உள்ள அம்மன் களை தரிசிப்பதால் துன்பம் பூப்போல்ஆகி விடும் என்பது ஐதீகம்.

அருணகிரிநாதர் திருப்புகழில் இத்தல முருகனை புகழ்ந்து பாடியுள்ளார். கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் கோயிலுக்கு எதிரில் உள்ள மலைமீது மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. பவுர்ணமி தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். விநாயகர் முதல் சண்டிகேஸ்வரர்வரை அனைவருக்கும் ஆதித்ய விமானம் உள்ளது.

கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் கோயிலுக்கு எதிரில் உள்ள மலைமீது மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. புவுர்ணமி தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள்.

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயில் சூரியபகவானால் உண்டாக்கப் பட்டு அவரே பூஜை செய்ததாகவும் வரலாறு.

குழந்தை வரம் வேண்டுபவர்கள் அமாவாசை தினத்தில் ஈரத்துணியுடன் அம்மனை 11முறை சுற்றி வரவேண்டும். பின் அம்மனுக்கு வெண்ணெய் நைவேத்தியம் செய்து அதை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Tags: aanmigamtamilnaduTemple HistoryVamanapuriswarar temple
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பெண் டாக்டர் தற்கொலை : பலாத்காரம் செய்த போலீசார் ?

Next Post

செம்மலர் அன்னம் இயக்கும் ‘மயிலா’ IFFR-ல் திரையிடப்பட உள்ளது

Related Posts

மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
Bakthi

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
Bakthi

நாகர்கோவிலில் நாகராஜா திருக்கோவிலில் நாகர் சிலைகளுக்கு பால் மஞ்சள் ஊற்றி வழிபாடு

August 23, 2026
வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை
Bakthi

வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை

August 23, 2026
வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை
Bakthi

வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை

August 21, 2026
Next Post
செம்மலர் அன்னம் இயக்கும் ‘மயிலா’ IFFR-ல் திரையிடப்பட உள்ளது

செம்மலர் அன்னம் இயக்கும் ‘மயிலா’ IFFR-ல் திரையிடப்பட உள்ளது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

May 12, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

May 5, 2026
த.வெ.க. – காங்கிரஸ் கூட்டணி முயற்சி : ராகுலை சந்திக்க விஜய் முயற்சி ?

த.வெ.க. – காங்கிரஸ் கூட்டணி முயற்சி : ராகுலை சந்திக்க விஜய் முயற்சி ?

July 17, 2025
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.