மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ், பசுபதி, லால், அமீர், அனுபமா, ரஜிஷா உள்ளிட்ட நடிகர்கள் நடித்த பைசன் படம் வெளியாகி பரவலான பாராட்டுகளையும், வெற்றியையும் பெற்றுள்ளது.
படத்தை பார்த்த ரஜினிகாந்த், மாரி செல்வராஜை நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார். அவர் கூறியதாவது, “சூப்பர் மாரி! சூப்பர் பைசன்! படத்துக்கும் உங்கள் உழைப்பும், ஆளுமையும் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. வாழ்த்துக்கள்!” என்றார்.
இந்த பாராட்டை சமூக வலைதளத்தில் பகிர்ந்த மாரி செல்வராஜ், “பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை படங்களை பார்த்தபின் ரஜினிகாந்த் அண்ணன் என்னையும் அழைத்து பாராட்டியதுபோல், எனது ஐந்தாவது படமான பைசன் படத்தையும் பார்த்த பிறகு எனையும், ரஞ்சித் அண்ணனையும் தொலைபேசியில் அழைத்து மனதார பாராட்டிய சூப்பர் ஸ்டாருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இது என் முழு படக்குழுவின் சார்பிலும் ஆகும்” என்று கூறியுள்ளார்.
மேலும் மாரி செல்வராஜ் சமீபத்தில் கொடுத்த பேட்டியில், ரஜினிகாந்த் அவருடன் இணைந்து திரைப்படங்களை உருவாக்கும் ப்ராசஸ் இன்னும் தொடர்ந்துவருவதாகவும் தெரிவித்தார்.
 
			















