- ரூ.19,650 கோடி செலவில் கட்டப்பட்ட நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
- ஸோகோ இமெயிலுக்கு மாறியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். இதற்காக அந்த நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு, அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
- கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காசாவை பற்றிய கவலை முதல்வர் ஸ்டாலினுக்கு எதற்கு? என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
- ஒரு ஜிபி டேட்டா ஒரு கப் டீயை விட குறைவு. நாங்கள் வேகமான சீர்திருத்தங்களை செய்து வருகிறோம் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
- சீமான், விஜயலட்சுமி இருவரும் பரஸ்பர மன்னிப்புக் கோரிய நிலையில், வழக்கை முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
- சென்னை அருகே 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வழக்கில், வாலிபர் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்த சுப்ரீம்கோர்ட், அவரை வழக்கில் இருந்தும் விடுவித்து உத்தரவிட்டு உள்ளது.
- கரூர் செல்ல அனுமதி கேட்டு தவெக தலைவர் நடிகர் விஜய் தரப்பில் டிஜிபிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
- யுபிஐ மூலம் பணப் பரிமாற்றம் செய்ய பின் நம்பருக்கு பதிலாக இனி முக அடையாளத்தை பயன்படுத்தும் வசதியை வங்கி மற்றும் நிதித்துறைகளில் செயல்படுத்த ஆதார் முகமை அனுமதி அளித்துள்ளது.
- நமது விமானப்படை வீரர்கள் ஒவ்வொரு சகாப்தத்திலும் வரலாற்று சாதனை படைத்துள்ளனர். என ஆண்டு வாரியாக இந்திய விமானப்படை தளபதி அமர்ப்ரீத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
- சென்னையில் இன்று (அக் 08) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.90,400க்கும், கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,300க்கும் விற்பனை செய்யப்பட்டது. மதியம் மீண்டும் சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,080க்கு விற்பனை ஆகிறது.