தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், நாளை நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் தனது தேர்தல் பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
“வாகை சூடும் வரலாறு திரும்புகிறது ; உங்க விஜய் நான் வரேன்” என்ற தலைப்பில் அவர் மாநிலம் முழுவதும் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். கடந்த 13ஆம் தேதி திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் துவங்கிய இந்த சுற்றுப் பயணம், ஒவ்வொரு சனிக்கிழமையும் இரண்டு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.
இதற்கமைய, தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விஜயின் நாளைய பிரச்சார அட்டவணை குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,
நாமக்கல் – கே.எஸ். திரையரங்கம் அருகில் காலை 8.45 மணி
கரூர் – வேலுச்சாமிபுரம் பகுதியில் நண்பகல் 12 மணி
மக்கள் சந்திப்பு நடைபெற உள்ளது. மேலும், பிரச்சாரப் பணிகளை ஒருங்கிணைக்க மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.