பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற ‘வீர ராஜா வீரா’ பாடல் தொடர்பான வழக்கில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு பெரிய தளர்வு கிடைத்துள்ளது.
முன்னதாக, இந்தப் பாடல் பாரம்பரிய ‘சிவா ஸ்துதி’ பாடலின் சுருதியை ஒத்ததாக இருப்பதாக கூறி, பாரம்பரிய ஃபயாஸ் வசிஃபுதீன் தாஹர் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற தனி நீதிபதி, ரஹ்மான் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் 2 கோடி ரூபாய் தொகையை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்றும், அதில் 2 லட்ச ரூபாய் தொகையை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவுக்கு எதிராக ரஹ்மான் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த நீதிபதி ஹரி சங்கர் தலைமையிலான அமர்வு, முந்தைய தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்துள்ளது.
மேலும், உரிமை மீறல் குறித்த விவகாரத்தில் நீதிமன்றம் எந்தத் தீர்ப்பையும் வழங்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்தியது.
இந்தத் தீர்ப்பால், ‘வீர ராஜா வீரா’ பாடல் தொடர்பான சட்டப்பூர்வ சிக்கலில் இருந்து ஏ.ஆர். ரஹ்மான் தற்காலிக நிம்மதி பெற்றுள்ளார்.