- ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளத்தை தீபாவளி போனஸாக வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- அதிமுக களத்தில் முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாம் இடத்திற்குத்தான் போட்டி தமிழகத்தில் நடக்கிறது என சமீபத்தில் தவெக, திமுக இடையே போட்டி என்று கூறி தவெக தலைவர் விஜய்க்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
- பீஹார் சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதாக கூறி மாம்பழம் சின்னத்தை அன்புமணி பெற்றிருக்கிறார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
- பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
- அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ஆகியோர் ஐநா சபையில் உரையாற்ற சென்ற போது எஸ்கலேட்டர் (நகரும் படிக்கட்டு) பழுதாகியது. இது குறித்து விசாரணை நடத்துமாறு வெள்ளை மாளிகை நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது.
- இந்தியா எப்போதும் உக்ரைனின் பக்கம் இருக்கிறது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
- என் உடலில் உயிர் இருக்கிற வரையில் உழைப்பேன் என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
- தவெகவினர் சின்னப்பிள்ளைகள், அவர்கள் பக்குவப்பட வேண்டும், பொதுவெளியில் விமர்சனங்களுக்கு பதில் கொடுத்து தான் ஆக வேண்டும் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.
- மத்திய அரசு கொண்டு வரும் எந்த திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் வரவேற்பதில்லை என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.
- தூத்துக்குடி சிப்காட்டில் ரூ.1,156 கோடியில் தொழிற்சாலையை ரிலையன்ஸ் குழுமம் அமைக்க உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த நிறுவனம் மூலமாக 2 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.