வலங்கைமான் வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீரில் மிதக்கும் ஆயிரகணக்கான குறுவை நெற்பயிர்கள் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்..
காவிரி டெல்டா மாவட்டத்தில் கடைமடை மாவட்டமான திருவாரூர் மாவட்டம் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள மாவட்டம் இந்த மாவட்டத்தில் விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் மிகுந்த மாவட்டத்தில் இரவு பெய்த கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெல் மணிகள் நீரில் மூழ்கி சேதம் அடைந்து வருகிறது இரவு பெய்த கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்திற்கு உட்பட்ட புலவர்நத்தம், பாப்பாக்குடி நரிக்குடி ,கல்லுக்குடி கருப்பட்டி பள்ளம் சாரநத்தம் , சன்னதி மானாநல்லூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஜீன் 12ந்தேதி மேட்டுர் அணையில் திறக்கபட்ட தண்ணீரை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மணிகள் முழுவதும் வயல்களில் சாய்ந்து மழை நீரில் மிதக்கிறது இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் கடந்த ஆண்டு போல இந்தாண்டும் தொடர்ந்து இயற்கை சூழல் காரணத்தினால் நெற்பயிர்கள் முழுவதும் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது இந்த நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது விவசாயிகள் கொண்டும வரும் நெல்லை ஈரப்பதம் பார்க்காமல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல்செய்ய வேண்டும் வேளாண் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை முறையாக கணக்கிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏதேனும் உரிய நிவாரண வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
பேட்டி
1, ராஜ்மோகன் விவசாயி புலவர்நத்தம்

















