தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த கனமழை பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி .
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் மாலை நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது இந்நிலையில் இன்று தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட தரங்கம்பாடி,பொறையார், திருக்கடையூர், சங்கரன்பந்தல், செம்பனார்கோயில், ஆக்கூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்தது மாலை நேரம் பெய்த மழையின் காரணமாக பள்ளி கல்லூரிகள் மற்றும் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பும் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டனர்.
மேலும் மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியுற்றனர். இந்த மழை சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு ஏற்றதாகவும் இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
