திருவள்ளூர் மாவட்டத்திற்கு வரும் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டு மூன்று மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் எஸ் பி அலுவலகத்தில் அனுமதி கேட்டு மனு.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சியில் தொடங்கிய முதல் கட்ட பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வரும் 27ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்க கோரி திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் குட்டி என்கின்ற பிரகாசம்.
திருத்தணி மேற்கு மாவட்ட செயலாளர் டெல்லி, திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட கட்சியினர் ஒன்று திரண்டு எஸ் பி அலுவலகத்தில் எஸ்பி விவேகானந்தா சக்லாவை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
திருத்தணி கமலா திரையரங்கம், கும்மிடிப்பூண்டி பஜார் வீதி, திருவள்ளூர் காமராஜர் சிலை பகுதி உள்ளிட்ட மூன்று இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு அனுமதி கேட்டு மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கட்சியின் மூலமாக தன்னார்வலர்களை ஒருங்கிணைக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளை ஏற்பாடு செய்து தர வேண்டும் எனவும் போக்குவரத்து உள்ளிட்ட வேலைகளுக்கு இடர்பாடு இல்லாமல் தன்னார்வலர்களையும் ஈடுபடுத்த வேண்டுமென எஸ் பி கேட்டுக் கொண்டதாக தெரிவித்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளருடன் 20 நிமிட பேச்சுவார்த்தையில் அனுமதி குறித்து கலந்தாலோசித்து தெரிவிக்கப்படும் எனவும் காவல்துறையினர் தாங்கள் கேட்டுள்ள இடங்களில் ஏதேனும் மாற்றம் ஏற்படும் பட்சத்தில் பின்னர் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
27 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ள தவெக தலைவர் விஜயின் பிரச்சாரத்திற்கு 200க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்களுடன் மூன்று மாவட்ட செயலாளர் கூட்டாக எஸ் பி அலுவலகத்தில் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.
பேட்டி :விஜயகுமார். டில்லி, குட்டி. ( மாவட்டச் செயலாளர்கள் )
















