மயிலாடுதுறை மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் இணைக்கப்பட்டுள்ளனர். அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 862 பூத்களிலும் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தினர் உறுதிமொழி எடுக்கின்றனர். மாவட்ட செயலாளர் நிவேதாமுருகன் எம்எல்ஏ பேட்டி:-
மயிலாடுதுறை திமுக மாவட்ட செயலாளரும், பூம்புகார் எம்.எல்.ஏ.வுமான நிவேதாமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் ; ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை கடந்த ஜுலை மாதம் தமிழக முதல்வர் தொடங்கிவைத்தார். பன்னாட்டு பொருளாதாரம், அரசியல் அணிதீகளுக்கு எதிராக உள்ளவர்களை இணைக்கின்ற பாலமாக உள்ளது. தமிழகத்தில் ஒருகோடிக்கு மேற்பட்ட குடும்பங்களை இணைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் ஒரு லட்சம் குடும்பத்தை சேர்ந்த 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் இணைக்கப்பட்டுள்ளனர். மத்திய பாஜக அரசு பலவகையில் தமிழகத்தின் வளர்ச்சியை தடுத்துக்கொண்டு இருக்கிறது அதனை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. பீகாரில் பல லட்சம் வாக்காளர்களை நீக்கியுள்ளனர். கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளனர். தேர்தல் ஆணையம் பதில் அளிக்க முடியாது என்று தன்னிச்சையாக கூறியுள்ளனர். மிக்பெரிய அளவில் அநீதி நடந்துகொண்டிருக்கிறது. கீழடி அகழாய்வை முடக்குகிறார்கள். வௌியில் தெரிந்தால் தமிழகம் வளர்ச்சி அடைந்துவிடும் என்ற நோக்கில் பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழகம் அனைத்திற்கும் முன்னோடியாக இருக்கக்கூடாது, தமிழகத்தின் தொன்மையை வௌியில் தெரியக்கூடாது என்பதற்காக கீழடி அகழாய்வை வௌியில்கொண்டுவர மறுக்கின்றனர். தமிழகத்திற்கு உரிய நிதியை விடுவிக்காதது, வாக்காளர்களை ஏமாற்றுவது, தமிழகத்தை வஞ்சிப்பதுபோன்றவற்றை தட்டிகேட்பதற்குத்தான் ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் செயல்பட்டு வருகிறது இதனை வலியுறுத்தி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டத்தில் இணைக்கப்பட்ட ஒருலட்சம் குடும்பத்தினரும் 862 பூத்களிலும் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தினர் உறுதிமொழி எடுக்கின்றனர்.
கரூரில் நடக்கும் முப்பெரும் விழாவில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து திரளானோர் கலந்துகொள்ள உள்ளனர் என்றார். உடன் நகர செயலாளர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் இமயநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

















