- திமுக அரசுக்கு எதிராக பேசுபவர்களை காவல்துறை மூலம் முடக்குகிறார்கள், என யுடியூபர் சவுக்கு சங்கர் குற்றம்சாட்டி உள்ளார்.
- தமிழகம் பீஹார் அல்ல. மக்கள் விழிப்புணர்வு பெற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது, என வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார்.
- கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு பல கோடி மதிப்பிலான வைர கிரீடம், தங்க நெக்லஸ் மற்றும் வாளை வழங்கினார் இசையமைப்பாளர் இளையராஜா.
- அடுத்ததாக மலை, கடல் மற்றும் தண்ணீர் மாநாடு நடத்தப்போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
- துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று ( செப்.12) காலை 10 மணிக்கு பதவியேற்க உள்ளார். ஜனாதிபதி மாளிகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
- 55 வயதுக்கு உட்பட்ட அனைத்து ஆசிரியர்களும் ‘ டெட் ‘ தேர்வில் தேர்ச்சி பெறுவதை கட்டாயமாக்கி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
- ரஷ்ய ராணுவத்தில் வேலை தொடர்பாக வரும் விளம்பரங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
- வெளிநாடு பயணத்தின் போது, இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் காங்கிரஸ் எம்பி ராகுல், விதிமுறைகளை தொடர்ந்து மீறுகிறார், என சிஆர்பிஎப் புகார் கூறியுள்ளது.
- டில்லியில் இருந்து காத்மாண்டுவுக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் TailPipe பகுதியில் ஏற்பட்ட தீயை தொடர்ந்து அந்த விமானம் கிளம்பாமல் புறப்பட்ட இடத்துக்கு திரும்பியது. இதனால், விமானத்தில் இருந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
- இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது போல தான் நாங்களும் கத்தாரில் தாக்குதல் நடத்தினோம், என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.