January 23, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

திரிம்பகேஸ்வரர் கோவில்

by Satheesa
September 11, 2025
in Bakthi
A A
0
திரிம்பகேஸ்வரர் கோவில்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மகாராஸ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் திரியம்பகம் என்னுமிடத்தில் திரிம்பகேஸ்வர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் தாயாராக ஜடேசுவரி வீற்றிருக்கிறாள்.

புனித கோதாவரி நதி பிறக்கும் கொண்ட திருத்தலம். இந்தக் கோவிலுக்குச் சென்றால் எல்லா பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. இது 18 ஆம் நூ ற்றாண்டில் கட்டப்பட்ட கோயிலாகும்.

இத்தலத்தில் குசாவர்த்த தீர்த்தம், கங்காத் துவாரம், கோடித்தீர்த்தம், பல்வ தீர்த்தம், நீலகங்காதீர்த்தம், கோதாவரி, ராமகுண்டம், லட்சுமண குண்டம், கவுதம குண்டம். மணக்ர்ணிகத் தீர்த்தம், கஞ்சன் தீர்த்தம் ஆகிய புனித தீர்த்தங்கள் உள்ளன.

சிவபெருமானின் 12 Npஜாதிர்லிங்களுக்குள் இதுவம் ஒன்று, சுயம்பு லிங்கம் லிங்கக் கருவறையில் எப்போதும் நீர் ஊற்றிக்கொண்டிருக்கும்.
திரியம்பகம் பன்னிரு ஜோதிர் லிங்கத்தலங்களில் ஒன்று. இதனருகே பிரம்ம கிரியில் கோதாவரி நதி உற்பத்தி ஆகிறது. அம்மலையில் கவுதமர் வாழ்ந்த குகையும், அவரால் உண்டாக்கப்பட்ட புனித தீர்த்தமும் உள்ளன. கவுதமர் வழிபட்ட 1008 லிங்கங்களும் அக்குகையில் உள்ளன.

ஆன்மீக வாழ்க்கைக்கு ஏற்ற இயற்கை சூழல் நிலவுதால் சித்தர்கள் வாழ்ந்த இடங்களும், தபோ வனங்களும் உள்ளன. மூலஸ்தானத்தில் மூன்று சிறிய லிங்கங்கள் ஒரே ஆவுடையாரில் உள்ளன. அதில் நீர் எப்போதும் சுரந்து கொண்டேயிருக்கும் அதிசயம் நிகழ்கிறது.

குரு சிம்ம ராசியில் வரும் போது பன்னிரு வருடங்களுக்கு ஒருமுறை கும்பமேளா கொண்டாடப்படுகிறது. நமது நாட்டின் எல்லாப்பக்கங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரியம்பகேசத்திற்கு வந்து செல்கின்றனர்.

இங்குள்ள மலைப்பகுதியானது அமைதிக்கும் மனநிம்மதிக்கும் ஏற்ற இடம் எனப் பல காலத்திலும் பல யோகிகளும், சாமியார்களும், பக்தர்களும் வந்து தங்கி அமைதி காண்கின்றனர். யாத்திரை வந்த பக்தர்களும் மனம் நிறைவு பெற்றுச் செல்கின்றனர்.

உலகில் உள்ள புனித ஆறுகளும், குளங்களும், தேவர்களும் கூட இங்கே வந்து அவர்கள் அடைந்த பாவங்களைப் போக்கித் தூய்மை பெற்றுச் செல்லும் சிறப்புமிக்க தலம்.

குசாவர்த்த தீர்த்தத்தைத் திருமாலே இங்கேயிருந்து காவல் காத்து வருகிறார் எனில் இதன் சிறப்பு கூறவும் முடியாது. கும்பமேளா காலத்தில் இத்தீர்த்தம் மேலும் புனிதம் அடைகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மகமாதம் தசமியன்று நிலாவில் தேவர்கள் வந்து கோதாவரியை வாழ்த்துகின்றனர். அதனை இத்தலத்தில் பெரிய விழாவாகக் கொண்டாடுகின்றனர்.இராமர் இலக்குமணருடன் இங்கே வந்து, தமது தந்தை தசரதருக்கு இத்தீர்த்தத்தில் சிரார்த்தம் செய்து, அவரது ஆத்மா சாந்தியடையச் செய்துள்ளார்.

எனவே இங்கே, இறந்த முன்னோர்களுக்குச் சிரார்த்தம் செய்தால் அவர்கள் சுவர்க்கம் அடைவார்கள். சர்ப்பதோ~ம் உள்ளவர்கள் இங்கு வந்து, தகுந்த வழிபாடு செய்தால் அது நீங்கிவிடும். இக்கோயில் சிவாஜி மகாராஜா காலத்தில் புதுப்பிக்கப்பட்டது.

தினசரி, ஒரு முக வெள்ளிக்கவசம் வைத்து வழிபாடு நடைபெறுகிறது. திங்கள் மட்டும் ஐந்து முகத்தங்கமுலாம் பூசப்பட்டது வைத்து பூசிக்கப்படுகிறது. இக்கோயில் சிற்பக்கலைக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

பிரம்மகிரியில் கவுதமர் என்ற மகா தவசியும் முனிவருமானவர், தமது மனைவி அகல்யாவுடன் தபோவனம் அமைத்துத் தவம் செய்துவந்தார். அவரது தவவலிமையால் பிரம்மகிரிப் பகுதியில் மழை பெய்து செழிப்பாக இருந்தது.

மற்றப்பகுதிகளில் மழையில்லாமல் பஞ்சம் ஏற்பட்டு குடிப்பதற்குக் குடிநீர் கூடக் கிடைக்காமல் மக்கள் தவித்தனர். இதனால் தமது தினசரிப் பூஜைகளைச் செய்ய முடியாத பல முனிவர்கள் வேறு இடங்களிலிருந்து இங்கு வந்து குடியேறினார்கள்.

தம் குடும்பத்துடன் வந்து முனிவர்களை, கவுதமரும் அன்புடன் வரவேற்று அப்பகுதியில் தபோவனம் அமைத்து நன்கு வாழ வைத்தார். காலம் செல்லச் செல்ல ஒருசில முனிவர்கள் கவுதமர் மீது பொறாமை கொண்டனர். அவரது தவ வலிமையைக் குறைக்க வேண்டும். அவரை எப்படியாவது இப்பகுதியினின்றும் விரட்டி விட வேண்டும் என எண்ணினர்.

அதில் ஒரு முனிவருக்கு விநாயகரை வரவழைக்கும் மந்திரம் தெரியும். எனவே எல்லோரும் ஒன்று சேர்ந்து யாகம் செய்து, விநாயகரை வரவழைத்துத் தங்களது வேண்டுதலைக் கூறினார்கள்.
விநாயகர் முனிவர்களது எண்ணம் தவறானது என்றும், அதனால் தீங்கு ஏற்படும் என அறிவுரை கூறிச் சென்று விட்டார். முனிவர்கள் விடுவதாக இல்லை. பார்வதி
தேவியின் தோழிகளில் ஒருவரான ஜெயா என்ற வன தேவதையை வரவழைத்து, ஒரு பசுவாக உருவெடுத்து கவுதமமுனிவர் ஆசிரமத் தோட்டத்தில்மேயும்படிச் செய்தனர். தோட்டத்தில் ஒரு பசு மேய்வதைக் கண்ட கவுதமமுனிவர் தர்ப்பைப் புல்லால் பசுவை விரட்டினார்.

மாயப் பசுவானதால் பசு இறந்தது போல் நடித்துப் படுத்துக் கிடந்தது. மற்ற முனிவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, கவுதம முனிவர் மேல் பசுவைக் கொன்றதாகக் குற்றம் சாட்டினர். பசுவைக்கொன்ற தோ~ம் நீங்க பிரம்மகிரி மலையை 108 முறை சுற்றி வரவேண்டும் எனவும், 1008 லிங்கங்கள் வைத்துப் பூசை செய்ய வேண்டும் எனவும் கூறினர்.

கிரியைப் சுற்றப் போதுமான வலிமையில்லாமையினால் கவுதமர், 1008 மண்லிங்கங்களை வைத்து விரதமிருந்து சிவபெருமானை வைத்து வழிபட்டார். கடும் தவம் மேற்கொண்டார். சிவபெருமான் குற்றமற்ற கவுதம முனிவர்முன் தோன்றினார்.

தீயமுனிவர்கள் எண்ணம் தவறு என்றும், கவுதமருக்குப் பசுவைக் கொன்ற தோ~ம் இல்லை என்றும் கூறினார். கவுதமரும் மகிழ்ந்து ஈசனிடம் தீய முனிவர்களின் தீய எண்ணம் மறையவும், அவர்கள் செய்த தவறின் தோ~ம் அவர்களை விட்டு நீங்கவும், நாடு செழிப்பாக ஆகி மக்கள் பஞ்சமின்றி வாழவும் அருள்புரிய வேண்டும் எனவும் வரம் கேட்டார்.

சிவபெருமான் தமது ஜடாமுடியினின்றும் சிறிது கங்காதீர்த்தம் வரவழைத்துக் கவுதமரிடம் கொடுத்துச் சென்றார். சிவபெருமான் கொடுத்த நீரே ஆறாகப் பெருகி ஓடியது. அதுவே கோதாவரி அல்லது கவுதம நதி என்று கவுதமரின் பெயரால் தற்போது விளங்குகிறது.

அந்தக் கோதாவரி நதி நீரில் மூழ்கி கவுதமர் தாம் இழந்த தபோ பலமெல்லாம் பெற்றார். தீய முனிவர்களையும் அவர்கள் தோ~ம் நீங்க நீராடக் கூறினார். ஆனால் கோதாவரி நதி நீர் மறைந்துவிட்டது.

கவுதமர் மீண்டும் தர்ப்பைப்புல்லைத் தக்க மந்திர உபதேசம் செய்து மறைந்த கோதாவரி நீர் குசாவர்த்தகம் என்னும் இடத்தில் தோன்றச்செய்து, தீய முனிவர்களை அதில் நீராட வைத்து அவர்கள் தோ~ம் நீங்கச் செய்தார். அதன்பிறகு நாடு செழித்து நாட்டு மக்கள் பஞ்சமின்றி வாழ, கோதாவரி நதியாக நாட்டில் ஓடச் செய்தார்.

அதன்படியே இன்றும் பிரம்மகிரியில் உற்பத்தி ஆகும் கோதாவரி, முதலில் ஆல மர வேரிலிருந்து தோன்றி, மலைக்குள் சிறு தொட்டியில் நிறைந்து, பின் மீண்டும்
மறைந்து குசாவர்த்தம் என்னும் குளத்தில் வெளிப்படுகிறது. பின்பு கோதாவரி நதியாகத் திரியம்பகேசுவரர் கோயில் முன்பு கோடி தீர்த்தமாக உருவெடுத்து, இன்றும் ஓடுகிறது.

இந்தக் கதையே வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது. போதிய மழை இல்லாமையால், உலகத்தின் நன்மையின் பொருட்டு கவுதம முனிவர், தம் மனைவி அகல்யையுடன் பிரம்மகிரியில் கடுந்தவம் செய்தார். வருணன் கட்டளைப்படி ஒரு குளத்தை உருவாக்கினார். வருணனின் அருளால், அந்தக் குளத்தில் வற்றாமல் நீர் சுரந்தது. நீர் வளம் மிகுந்து அவருடைய ஆசிரமம் செழிக்கத் தொடங்கியது.

மற்ற முனிவர்களும் தம் தம் பத்தினிகளுடன் இங்கே வந்து தங்கினர். சில நாட்களில் ரி~p பத்தினிகளுக்குள் விரோதம் உண்டாயிற்று. அகல்யையின் கர்வத்தை அடக்க, அவளை இந்த இடத்தை விட்டே துரத்த வேண்டும் என்று மற்ற ரி~pபத்தினிகள் தீர்மானித்து, விநாயகரின் நியாயத்தை எடுத்துக் கூறியும் அவர்கள் கேட்கவில்லை.

பசு உருத் தாங்கிய விநாயகர், கவுதமர் பயிரிட்டிருந்த செடிகளைப் போய் மேய்ந்தார். பசுவைத் துரத்தக் கோலுடன் கவுதமர் ஓடியதுமே, அந்த மாயப் பசு உயிர் துறந்தது. அதனால் பசுவதை செய்த தோ~ம் ஏற்பட்டு விட்டதாக மற்ற முனிவர்கள் கூறினார்கள்.

இந்த தோ~ம் நீங்க, பிரம்ம கிரியை 101 முறை வலம் வரவேண்டுமென்றும், ஒரு கோடி மண் லிங்கங்களைப் பிடித்து வணங்க வேண்டுமென்றும், கங்கையை இந்த இடத்துக்கு வரவழைக்க, வேண்டுமென்றும், அந்த முனிவர்கள் கூறினார்கள். கவுதமரும் கடுந்தவம் இயற்றத் தொடங்கினார்.

அவருடைய தவத்துக்கு இரங்கி, சிவபெருமான் தரிசனம் அளித்தார். ர~ஷி பத்தினிகளின் கெட்ட எண்ணத்தைக் கூற, தோ~ம் எதுவும் கிடையாது என்றும் சொன்னார். தம் சடை முடியிலிருந்து சிறிதளவு கங்கா நீரையும் கொடுத்தார். அந்த நீரைப் பிரம்மகிரியில் வளர்ந்திருந்த பெரிய அத்தி மரத்தின் வேரில் விட்டார் கவுதமர். கங்கை பெருகத் தொடங்கிற்று.

கவுதமர் இந்த நதியைக் கொண்டு வந்தமையால் கோதாவரி அல்லது கவுதமி என்று அழைக்கப்படுகிறது. தம்மிடமிருந்த குசத்தினால் கங்கையின் போக்கை மாற்றி, மற்ற முனிவர்களும் தூய்மையடையச் செய்தார் கவுதமர். பவித்ர தேசம் என்று அழைக்கப்படும் இந்தத் தல மூர்த்தியைத் தரிசித்தால் மனமாசுகள் அகன்று ஆன்ம ஒளி சிறக்கும் என்பது ஐதீகம். இதன் தொடர்ச்சியாக அடுத்து பாகத்தில் நாம காண இருக்கும் திருக்கோயில் ஜார்கண்டு மாநிலத்தில் உளள வைத்தியநாத் திருக்கோயில் ஆகும்.

Tags: aanmigamdistrict newsdivonationaljothirlingammaharashtrasivan templetamilnaduTrimbakeswarar Temple
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இமானுவேல் சேகரன் நினைவு தினம் : சென்னையில் விஜய் அஞ்சலி !

Next Post

ரஷ்ய ராணுவத்தில் வேலை வாய்ப்பு பெயரில் மோசடி : இந்தியர்களுக்கு எச்சரிக்கை – வெளியுறவுத்துறை அறிவுரை

Related Posts

சீர்காழி புற்றடி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா- பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து வந்து வழிபாடு
Bakthi

சீர்காழி புற்றடி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா- பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து வந்து வழிபாடு

January 23, 2026
கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற குலசேகரம் கூடைதூக்கி ஶ்ரீ தர்ம சாஸ்தா கோவிலில் கும்பாபிஷேகம்
Bakthi

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற குலசேகரம் கூடைதூக்கி ஶ்ரீ தர்ம சாஸ்தா கோவிலில் கும்பாபிஷேகம்

January 21, 2026
திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் ஆலயத்தில் திருஞானசம்பந்தருக்கு பூதகணம் வாயிலாக சிவபெருமான் பொற்கிழி வழங்கும் ஐதீக விழா
Bakthi

திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் ஆலயத்தில் திருஞானசம்பந்தருக்கு பூதகணம் வாயிலாக சிவபெருமான் பொற்கிழி வழங்கும் ஐதீக விழா

January 21, 2026
கேரளா மாநிலம் சபரிமலைஐயப்பன் திருக்கோவிலில் மகரவிளக்கு பூஜை நிறைவடைந்து திருநடை அடைக்கப்பட்டது
Bakthi

கேரளா மாநிலம் சபரிமலைஐயப்பன் திருக்கோவிலில் மகரவிளக்கு பூஜை நிறைவடைந்து திருநடை அடைக்கப்பட்டது

January 20, 2026
Next Post
ரஷ்ய ராணுவத்தில் வேலை வாய்ப்பு பெயரில் மோசடி : இந்தியர்களுக்கு எச்சரிக்கை – வெளியுறவுத்துறை அறிவுரை

ரஷ்ய ராணுவத்தில் வேலை வாய்ப்பு பெயரில் மோசடி : இந்தியர்களுக்கு எச்சரிக்கை – வெளியுறவுத்துறை அறிவுரை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் தேனியில்TVKநிர்வாகிகள் விசில்களை ஊதி,பொதுமக்களுக்கு விசில்களை வழங்கி கொண்டாடினர்

தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் தேனியில்TVKநிர்வாகிகள் விசில்களை ஊதி,பொதுமக்களுக்கு விசில்களை வழங்கி கொண்டாடினர்

January 22, 2026
திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு

January 22, 2026
இன்றைய ராசிபலன் – செப்டம்பர் 14, 2025 (ஞாயிற்றுக்கிழமை)

இன்றைய ராசிபலன் – செப்டம்பர் 14, 2025 (ஞாயிற்றுக்கிழமை)

September 14, 2025
மயிலாடுதுறையில் நடைபெற்ற இலவச ஆயுஸ் மருத்துவ முகாமை தருமபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறையில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி

மயிலாடுதுறையில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி

0
விழுப்புரம் தவெக சார்பில் மாரியம்மன் ஆலயத்தில் விசிலை மாரியம்மனுக்கு மாலையாக அணிவித்து சிறப்பு பூஜை

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.