- தமிழகத்தில் நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு திட்டத்தை செப்., 25 முதல் புறக்கணிப்பதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
- ஓபிஎஸ், தினகரனுடன் சமரசம் பேசுவதற்கு தயாராக இருக்கிறேன், என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
- பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் இருவரும், இன்று போனில் கலந்துரையாடினர். இரு தரப்பு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சு நடத்தினர்.
- ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து, பொருட்களின் விலை குறைக்கப்பட்டதா? என்பதை ஆய்வு செய்வதே தன்னுடைய முதன்மையான வேலை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
- லண்டன் பல்கலையில் பயின்று வரும் இந்திய வம்சாவளி மாணவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.
- ஊராட்சி மன்றத் தலைவரே நகை திருடினால் இந்த ஆட்சி உருப்படுமா? என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேசினார்.
- நாட்டில் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டபோது, 450 கோடி ரூபாய் ரொக்கப்பணம் கொடுத்து சசிகலா சர்க்கரை ஆலையை வாங்கியிருப்பது, சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை மூலம் அம்பலமாகியுள்ளது.
- கட்சியின் நலனுக்காக தான் ஒருங்கிணைக்க வேண்டும் என்று பேசினேன், ஆனால் நீக்குவார்கள் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை என்று செங்கோட்டையன் கூறி உள்ளார்.
- கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் வெளியேறிய பிறகு அவர் சொல்லும் குற்றச்சாட்டுக்கு நான் பொறுப்பேற்க முடியாது என தமிழக பாஜ நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
- பீஹாரில் உள்ள ராஜ்கிர் ஹாக்கி மைதானத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் சீனாவை 7-0 என்ற கோல் கணக்கில் இந்தியா தோற்கடித்தது. இதன்மூலம், பைனலுக்கு முன்னேறியுள்ளது.

















