மயிலாடுதுறை அருகே திருவிளையாட்டம் கிராமத்தில் தனிநபருக்கு சொந்தமான பல கோடி மதிப்புடைய வணிக வளாகத்தின் முன்பு நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அதிமுக, விசிக, பாமக கட்சியினர் குற்றச்சாட்டு:- தனக்கும், தன்னைச் சார்ந்தவர்களுக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கொலைமிரட்டல் விடுப்பதாகவும், உடனடியாக ஆக்ரமிப்பை அகற்றி தர வேண்டும் என பாதிக்கப்பட்ட நபர் மாவட்ட ஆட்சியரிடம் மனு:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருவிளையாட்டம் கிராமத்தில் வசித்து வருபவர் கென்னடி. இவர் தனக்கு சொந்தமான வணிக வளாகத்தின் முன் பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம், கொடிக்கம்பங்கள் வைத்து ஆக்கிரமித்து அடைத்து வைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இதையடுத்து ஆக்ரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இந்த உத்தரவை நிறைவேற்றக்கோரி பலமுறை துறை சார்ந்த அலுவலர்களிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்ரமிப்பை அகற்றிய நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அந்த இடத்தை மீண்டும் ஆக்ரமித்துள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் அதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பாமக கட்சியினருடன் வந்த கென்னடி, மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் மனு அளித்தார். அந்த மனுவில் கம்யூனிஸ்ட் கட்சியினர் தனக்கும், தன்னைச் சார்ந்தவர்களுக்கும் கொலைமிரட்டல் விடுப்பதாகவும், உடனடியாக ஆக்ரமிப்பை அகற்றி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
