- அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன் என்று அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
- தமிழகத்தில் குற்றவாளிகள் சுதந்திரமாக உலாவுகின்றனர் என்று பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
- ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம் முன்னிட்டு, பொதுமக்களிடம் மொபைல் போனில் ஓடிபி எண் பெறுவதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் திமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
- இன்றைய நிலவரப்படி, 100 சதவீதம் நிசார் செயற்கைக்கோள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
- தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரித்துள்ளதாக சென்னை ஐகோர்ட் வேதனை தெரிவித்துள்ளது.
- நடுவானில் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் உள்ளே கரப்பான் பூச்சிகள் இருந்ததால் பயணிகள் அலறினர். இந்த சம்பவத்திற்கு விமான சேவை நிறுவனம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
- இங்கிலாந்துக்கு எதிராக பரபரப்பாக நடந்த 5 வது டெஸ்டில் 6 ரன்னில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் செய்தது.
- மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரிலிருந்து மும்பைக்குச் சென்ற இண்டிகோ விமானத்தின் டயர் பஞ்சரானதால், பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
- நமது ஹீரோக்களுக்கு சபாஷ் என ஓவல் டெஸ்ட் வெற்றிக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியிடம் காங்கிரஸ் எம்பி மன்னிப்பு கேட்டார்.
- இந்தியாவுக்கான வரியை மேலும் உயர்த்த போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.