மயிலாடுதுறையில் 682 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 54கோடியே88 லட்சம் வங்கி கடன் உதவிகள் மற்றும்அடையாள அட்டை வழங்கும் விழா.மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு வழங்கினர்.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடனுதவிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா சேலத்தில் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை தனியார் திருமண மண்டபத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடனுதவிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா
மாவட்ட ஆட்சியர் திரு.ஹெச்.எஸ்.ஸ்ரீPகாந்த் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர்,எம்.பன்னீரீசெல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ராஜகுமார் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி திட்டங்களை வழங்கினர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கும் 682 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சார்ந்த 7163 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூபாய்.54 கோடியே 88 லட்சம் மதிப்பிலான வங்கிக்கடனுதவிகள் வழங்கப்பட்டது. மேலும் 3918 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் முதல் கட்டமாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்டம் திட்ட அலுவலர் திரு.சீனிவாசன்;, மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் திரு.செல்வராஜ்;, சீர்காழி நகராட்சி தலைவர் திருமதி.துர்கா பரமேஸ்வரி;, தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் திருமதி.சுகுண சங்கரி;, உதவி திட்ட அலுவலர் திரு.மனுநீதிசோழன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

















