4 ஐ.ஜி.க்கள் உட்பட 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு உத்தரவு…

தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ் குமார் மற்றும் அமுதா ஆகியோருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

நான்கு ஐ.ஜி.க்கள் உட்பட தமிழ்நாட்டில் 33 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 33 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 29 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் நான்கு ஐ.ஜி.க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், காவல் விசாரணையின்போது, கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்ததைத் தொடர்ந்து, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சிவகங்கை காவல் கண்காணிப்பாளர் அஷிஷ் ராவத், சென்னையில் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் சரக ஐ.ஜி., பிரவீன்குமார் அபினபு, டிஜிபி அலுவலக ஐஜி-யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலிலிருந்த அனில்குமார் கிரி, சேலம் சரக ஐஜி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் சரக டிஐஜி தேவராணி, காஞ்சிபுரம் சரகத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், சென்னை நுண்ணறிவுப் பிரிவு இணை ஆணையர் தர்மராஜன், வேலூர் சரக டிஜஜி-யாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேடு துணை ஆணையர் அதிவீரபாண்டியன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், அந்த இடத்தில் சென்னை பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையர் சுஜித் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version