தனியார் பள்ளியில் நடைபெற்ற 26 ஆம் ஆண்டு விழா

தனியார் பள்ளியில் நடைபெற்ற 26 ஆம் ஆண்டு விழா, பள்ளி மாணவ மாணவிகளின் பங்களிப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

நாகப்பட்டினம் மாவட்டம் ஸ்ரீ லலிதாம்பிகை வித்யா மந்திர் பள்ளியில் 26 வது ஆண்டு வருடாந்த விளையாட்டு விழா நாகையை அடுத்த பரவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக நாகை மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலச்சந்திரன் கலந்து கொண்டு கொடியேற்றி பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு நிகழ்ச்சியின் போட்டிகளான வரிசைப்படுத்துதல்;
தவளைப் பந்தயம்;
தண்ணீர் நிரப்புதல்;
ஓட்டப் பந்தயம்;
ஜூட் பந்தயம் என பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது .இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலச்சந்திரன் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார். நிகழ்ச்சியின் முடிவில் பெற்றோர்களுக்கான சிறப்பு போட்டிகள்
நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி தாளாளர் ஆர்த்தி சந்தோஸ் பரிசுகளை வழங்கினார்.. மேலும் குழந்தைகளுக்கான நடன போட்டிகள் நடத்தப்பட்டது பெற்றோர்களிடையும் மாணவர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது

Exit mobile version