விவசாய சங்க தலைவர் பி.ஆர். பாண்டியனை விடுதலை செய்யக்கோரி வருகிற 23 ந்தேதி சென்னையில் கண்ணியகுமாரி முதல் சென்னை வரை உள்ள விவசாயிகளை ஒன்று திரட்டி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த பி.ஆர்.பாண்டியன் தமிழக அனைத்து விவசாயிகள் சங்க தலைவராகவும், காவிரி விவசாய சங்க பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார் இந்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் பெரியகுடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பொது சொத்துகளை சேதப்படுத்தியதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து பி.ஆர். பாண்டியன்கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பி.ஆர். பாண்டியனை விடுதலை செய்யக்கோரி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் அதன் ஒருபகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பெரியார் சிலை முன்பு அனைத்து விவசாய சங்கத்தின் சார்பில் பி.ஆர். பாண்டியனை விடுதலை செய்யக்கோரியும், தமிழகத்தில் ஒஏன்ஜிசி நிர்வாகம் கச்சை உள்ளிட்ட எண்ணெய் எடுக்கும் முயற்சியை கைவிட கோரி 200க்கும் மேற்பட்டோர் மத்திய மாநில் அரசை கண்டித்து கண்டன முழக்கம் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது வருகிற 23ந்தேதி சென்னையில் கண்ணியகுமாரி முதல் சென்னை வரை உள்ள விவசாயிகளை ஒன்று திரட்டி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் வருகிற 16. மற்றும் 17ந்தேதி ஆகிய இரண்டு தினங்களில் விவசாயிகள் ஒற்றை முழக்கத்தோடு அனைத்து அரசியல் கட்சியினர் , எதிர்கட்சி தலைவர் மற்றும் தமிழக கவர்னரை சந்தித்து நியாயம் தான நியாயம் தான என விவசாயிகள் கோரிக்கையை முன்வைப்பதாக தெரிவித்தனர்
பேட்டி
ஸ்ரீதர் காவிரி விவசாய சங்க மாநில அமைப்பு செயலாளர்

















