6 படங்களில் 22 ஹீரோக்கள்.. லோகேஷ் கனகராஜ் கருத்துக்கு எதிர்ப்பு !

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி இயக்குனராக உயர்ந்திருப்பவர் லோகேஷ் கனகராஜ். வெறும் எட்டு ஆண்டுகளில் ஹிட்டான படங்களை தொடர்ந்து கொடுத்ததன் மூலம், ரசிகர்களிடம் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார்.

அதிகப்படியான ஹீரோக்களை ஒரே படத்தில் இணைத்துக் காட்டும் முயற்சியால் புகழ்பெற்ற அவர், சமீபத்தில் கோவையில் நடைபெற்ற கல்லூரி விழாவில் கலந்து கொண்டு பேசியபோது, “நான் தமிழ் சினிமாவுக்கு அதிக பங்களிப்பு செய்திருக்கிறேன். என் ஆறு படங்களில் மொத்தம் 22 ஹீரோக்களை கதைக்குள் கொண்டு வந்திருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

ஆனால், இந்தக் கருத்தே தற்போது சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. “சினிமாவுக்கு அர்ப்பணித்து பங்களித்த பாரதிராஜா, இசைஞானி இளையராஜா, உலகநாயகன் கமல்ஹாசன் போன்ற நாயகர்களை விட, லோகேஷ் தனது பங்களிப்பை பெரிதாகச் சொல்வது சரியா?” என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

இதற்கிடையில், ‘கூலி’ படத்திற்கு கிடைத்த கலவையான விமர்சனங்கள், மேலும் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படம் லோகேஷ் கைகளில் இருந்து விலகியதாக வந்த தகவல்களும், அவரைச் சுற்றியுள்ள சர்ச்சையை அதிகரித்துள்ளன.

ரஜினி-கமல் இணையும் திரைப்படத்தை யார் இயக்கப்போகிறார்கள் என்ற ஆவலை ரசிகர்கள் வெளிப்படுத்தி வர, லோகேஷ் கனகராஜ் மீதான விமர்சனங்களும் நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டே செல்கின்றன.

Exit mobile version