தமிழ்நாட்டியில் திருப்பத்தூரில் வக்பு வாரிய சொத்துக்களில் பலகோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை மசூதியியின் குறிப்பிட்ட சில முத்தவளிகள் ஆக்ரமித்துள்ளனர். இதன் மூலம் ஏராளமான ஏழை மக்கள் பாதித்துள்ளனர். எனவே மத்திய உள்துறை அமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்டு ஏழைகளின் சொத்துக்களை மீது தர வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.
இது குறித்து டெல்லியில் சில மத்திய அமைச்சர்கள் , நாடாளுமன்ற உறுபினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோரிடம் எங்கள் கோரிக்கைகளை வலிவுறுத்தியுள்ளோம்.மேலும் இந்த விவகாரத்தில் சட்ட ரீதியாகவும் அணுக முடிவெடுத்துள்ளோம்.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே தமிழ்நாட்டில் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் மனுக்களை கொடுத்துள்ளோம்,15 நாட்களில் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவித்தனர்.ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் டெல்லியில் முகாமிட்டு மத்திய அமச்சர்களை சந்தித்து வருகிறோம்.
அதேபோல் திருப்பத்தூர் எஸ்பி-யிடம் பாதுகாப்பு கோரி மனு அளித்துளோம்.மேலும் இந்த விவகாரத்தை தமிழக முதல்வரிடமும் கொண்டு செல்ல முயற்சி எடுத்துள்ளோம் என தெரிவித்தனர்.விரைவில் நீதிமன்ற வழக்கும் தொடரப்படும்,இது தமிழகம் மட்டும் அல்லாமல் நாட்டின் மற்ற பகுதிகளியிலும் ஏழைமக்களின் சொத்துக்கள் வக்பு என்ற பெயரில் பறிக்கப்படுகிறது. என்றனர்.