முதலமைச்சர் பெயர் பயன்பாட்டுக்கு அனுமதி – உச்சநீதிமன்றத் தீர்ப்பை தொடர்ந்து திமுகவினர் கொண்டாட்டம்

முதலமைச்சர் பெயர் பயன்பாட்டுக்கு அனுமதி – உச்சநீதிமன்றத் தீர்ப்பை தொடர்ந்து திமுகவினர் கொண்டாட்டம்.

உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயரை பயன்படுத்தும் அனுமதியை உச்சநீதிமன்றம் வழங்கியிருப்பதை தொடர்ந்து, விழுப்புரத்தில் திமுகவினர் உற்சாகமாக கொண்டாடினர்.

விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் லட்சுமணன் உத்தரவு பேரில் திமுக சார்பில், விழுப்புரம் மத்திய மாவட்ட நகர செயலாளர்கள் சர்க்கரை மற்றும் வெற்றிவேல் தலைமையில் விழுப்புரம் புதுவை சாலை, காந்தி சிலை அருகே பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து உற்சாகக் கோஷங்கள் எழுப்பினர்.

Exit mobile version