March 25, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மிஸ் கூவாகம் 2025

by Satheesa
May 13, 2025
in News
A A
0
மிஸ் கூவாகம் 2025
0
SHARES
23
VIEWS
Share on FacebookTwitter

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் போட்டியில் திருநங்கைகள் பெண்களுக்கு நிகராக ரேம்ப் வாக்கில் விதவிதமான ஆடைகளை அணிந்து நடந்தது காண்போர் கண்களுக்கு விருந்தாக அமைந்தது முதல் இடத்தினை மாடலிங் செய்யும் “திருநெல்வேலியை சார்ந்த ரேனுகா 2025 மிஸ் கூவாகமாக தேர்வு” ,

இரண்டாம் இடத்தினை கள்ளக்குறிச்சியை சார்ந்தவரும் மூன்றாம் இடத்தினை கோயம்புத்தூரை சார்ந்தவர்கள் பிடித்தனர்.

மகாபாரதப் போரில் வெற்றி கிடைப்பதற்காக அரவான் என்ற இளவரசன், பஞ்ச பாண்டவர்களால் களபலி கொடுக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க புராண வரலாற்றை நினைவுக் கூறும் வகையில் உலகத்திலேயே திருநங்கைகளுக்கு என்றே கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுத்தோறும் சித்திரை மாதத்தில் திருநங்கைகள் ஒன்று கூடி விழா எடுத்து கொண்டாடி வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான கோயில் பூசாரிகளிடம் திருநங்கைகள் தாலி கட்டி திருமணம் செய்து கொள்ளும் நிகழ்ச்சி நாளையும் 13 ஆம் தேதி அதனைத்தொடர்ந்து மறுநாளான 14ஆம் தேதி கூத்தாண்டவர் தேரோட்டமும் நடைபெறும். தேரோட்டத்தில் திருநங்கைகள் அரவானுக்காக தாலி கட்டி கொண்டு மணக்கோலத்தில் இருப்பவர்கள் வெள்ளை புடவை அணிந்து தாலி அறுக்கும் நிகழ்வும் நடைபெறும்.

வரலாற்று சிறப்புமிக்க இத்திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி பெங்களூர், கேரளா, கர்நாடகா, டில்லி, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் விழுப்புரத்தில் குவிந்துள்ளனர்.
விழுப்புரத்தில் குவிந்துள்ள திருநங்கைகளை உற்சாகப்படுத்தும் வகையில் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் திருநங்கைகள் கலை விழா மற்றும் மிஸ் கூவாகம் அழகி போட்டி இன்று விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நடைபெற்றது. இவ்விழாவில் பாட்டு, நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் ஏராளாமான திருங்கைகள் கலந்து கொண்டு பாட்டு பாடியும், பரத நாட்டியம், கிராமிய நடனம் மற்றும் திரைப்பட பாடல்களுக்கு ஏற்ப நடமாடியும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தினர். திருநங்கைகளுக்கு மூன்று சுற்றுகளாக நடைபெற்ற போட்டியின் இறுதி போட்டி நகராட்ட்சி திடலில் நடைபெற்றதில் திருநங்கைகள் ஒய்யாரமாக நடந்து வந்து திறமையை வெளிப்படுத்தினர்.

மிஸ்கூவாகம் 2025ஆம் ஆண்டிற்காக நடைபெற்ற மிஸ் திருநங்கை அழகிப் போட்டியில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மும்பை போன்ற நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டு விதவிதமான உடைகளை அணிந்து இசைக்கு ஏற்றபடி நளினத்துடன் ஒய்யாரமாக நடந்து வந்து பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். இறுது போட்டியாக நகராட்சி திடலில் நடைபெற்றதில் இரண்டு சுற்றுகளில் தேர்வு செய்யபட்ட 15 திருநங்கைகள் கலந்து கொண்டு ஒய்யாரமாக ரேம்ப் வாக்கில் நடந்தனர். இந்த ஆண்டிற்கான மிஸ் திருநங்கையாக மூன்றாம் இடத்தினை ஆஸ்மிகா கோயம்புத்தூர் சார்ந்தவரும் அஞ்சனா கள்ளக்குறிச்சி இரண்டாம் இடத்தினையும் ரேனுகா முதல் இடத்தையும் பிடித்தனர். இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டின் மிஸ் திருநங்கையாக தேர்வு செய்யப்பட்ட மூவருக்கும் கிரீடம் அணிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக சின்னத்திரை நடிகை தேவிபிரியா, திரைப்பட நடிகை வனிதா விஜயகுமார், ரஞ்சனா ஆகியோர் கலந்து கொண்டனர். மிஸ் கூவாகம் நிகழ்ச்சியில் 6 திருநங்கைகள் மற்றும் ஒரு திரு நம்பி என 7 பேருக்கு இளம் திருநங்கை சாதனையாளர் விருது வழங்கப்பட்டு கொளரவிக்கப்பட்டது. மேலும் இறுதியாக தேர்வு செய்யபட்ட 7 திருநங்கைகளுக்கு சிரிப்பழகி ரேம்ப்வாக்கு அழகி, போட்டோகிராபிக் முகம், கட்டுக்க்கோப்பான உடல் என்று ஏழு பேருக்கு விருதும் வழங்கப்பட்டன.

Tags: district news
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தென்காசி | சாலையை கடக்கத் தவித்த மூதாட்டிக்கு உதவிய போக்குவரத்து எஸ்ஐ – சமூக வலைதளங்களில் பாராட்டு வெள்ளம்

Next Post

மிஸ் திருநங்கை விழாவில் நடிகர் விஷால் உணர்ச்சி வசீகர உரை

Related Posts

விழுப்புரம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் ADMK முன்னாள் அமைச்சர் C.V.சண்முகத்துக்கு போட்டியிட வாய்ப்பு
News

March 25, 2026
மேல்நாட்டு முறையில் இயற்கை விவசாயம் பெண் விவசாயி அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுகோள்

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் தேரோட்டம்
Bakthi

கம்பன் விரைவு ரயில் சேவையை, தடம் மாற்றக்கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

March 24, 2026
சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

March 24, 2026
விழுப்புரம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் ADMK முன்னாள் அமைச்சர் C.V.சண்முகத்துக்கு போட்டியிட வாய்ப்பு

விழுப்புரம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் ADMK முன்னாள் அமைச்சர் C.V.சண்முகத்துக்கு போட்டியிட வாய்ப்பு

0
மேல்நாட்டு முறையில் இயற்கை விவசாயம் பெண் விவசாயி அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுகோள்

மேல்நாட்டு முறையில் இயற்கை விவசாயம் பெண் விவசாயி அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுகோள்

0
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் தேரோட்டம்

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் தேரோட்டம்

0
கம்பன் விரைவு ரயில் சேவையை, தடம் மாற்றக்கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் 

கம்பன் விரைவு ரயில் சேவையை, தடம் மாற்றக்கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் 

0
விழுப்புரம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் ADMK முன்னாள் அமைச்சர் C.V.சண்முகத்துக்கு போட்டியிட வாய்ப்பு

விழுப்புரம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் ADMK முன்னாள் அமைச்சர் C.V.சண்முகத்துக்கு போட்டியிட வாய்ப்பு

March 25, 2026
மேல்நாட்டு முறையில் இயற்கை விவசாயம் பெண் விவசாயி அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுகோள்

மேல்நாட்டு முறையில் இயற்கை விவசாயம் பெண் விவசாயி அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுகோள்

March 25, 2026
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் தேரோட்டம்

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் தேரோட்டம்

March 25, 2026
கம்பன் விரைவு ரயில் சேவையை, தடம் மாற்றக்கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் 

கம்பன் விரைவு ரயில் சேவையை, தடம் மாற்றக்கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் 

March 25, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.