மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 2500-கும் மேற்பட்ட வேலைநாடுநர்கள் பங்கேற்பு. 500-கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு

மயிலாடுதுறையில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 2500க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்கள் பங்கேற்பு. 500க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பை பெற்றனர்:-

செல்போனை அதிகம் பயன்படுத்தாதீர்கள் நேரத்தை மிச்சம் படுத்துங்கள் அதுவே உங்கள் வாழ்க்கையின் உந்துதலாய் அமையும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் வேலை நாடுவர்களுக்கு ஊக்கம் கொடுத்து சிறப்புரை.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தலைமையில், எம்எல்ஏக்கள் நிவேதா எம்.முருகன், .பன்னீர்செல்வம், ராஜகுமார் தொங்கி வைத்து பார்வையிட்டனர்.:
இந்த முகாமில் 85-ற்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான தகுதிவாய்ந்த வேலை நாடுநர்களை தேர்ந்தெடுத்தனர். இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு 2500க்கும் மேற்பட்ட வேலை நாடுநர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பங்கேற்று தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் நிவேதா எம்.முருகன், .பன்னீர்செல்வம், ராஜகுமார் வழங்கினர். தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 500க்கும் மேறபட்டோர் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியில், மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், மகளிர் திட்டம் திட்ட அலுவலர் சீனிவாசன், மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) அருணகிரி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பழனிவேல், வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் வேல்முருகன், தாட்கோ மாவட்ட மேலாளர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் பேசுகையில் செல்போனை அதிகம் பயன்படுத்தாதீர்கள், சமீபத்தில் youtube சேனலில் வெளிவந்த குறும்படத்தை பார்த்தேன், அதில் ஒரு இளைஞன் செல்போனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அவரது தாயாருக்கு நெஞ்சு வலியால் துடித்து அருகில் இருந்த மகனை அழைக்கும் போது கையை உதறிவிட்டு செல்போனில் மூழ்கியுள்ளார், சிறிது நேரத்தில் தாயார் இறந்து போனது தெரியாமலேயே தொடர்ந்து வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார். உறவினர்கள் வந்து பார்த்தபோது தாயார் இறந்ததை கூட தெரியாமல் வீடியோ கேம் விளையாடிய இளைஞனை திட்டியது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டது. ஏன் நானே சில நேரங்களில் செல்போனை அதிக நேரம் பயன்படுத்துகிறேன். ஆகையால் நேரத்தை வீணாக்காதீர்கள் செல்போனை அதிகம் பயன்படுத்த வேண்டாம், வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் சும்மா இருக்கவும் வேண்டாம், படித்து முடித்து விட்டால் கண்டிப்பாக வேலை தேடி வேலைக்குச் செல்ல வேண்டும். என வேலை நாடுபவர்களுக்கு உந்துதலாய் அறிவுரை சொல்லி சிறப்புரையாற்றினார்.

Exit mobile version