மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமிற்கு தற்கொலை முயற்சி

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமிற்கு தற்கொலை முயற்சியில் ஈடுபட மண்ணெண்ணெய்யை பாட்டிலில் மறைத்து எடுத்து வந்த முதியவரை பிடித்து போலீசார் விசாரணை. மகன்கள் இடம் கொடுக்காத விரக்தியிலும், புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததாலும் மண்ணெண்ணெய் உடன் வந்ததாக முதியவர் குமுறல்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று மாவட்ட ஆட்சியரின் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீராம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சார்ந்த மக்கள் தங்களது கோரிக்கைகளுடன் மாவட்ட ஆட்சியரகத்தில் குவிந்த வண்ணம் இருந்தனர். இவ்வாறு மாவட்ட ஆட்சியரகம் வரும் பொது மக்களை போலீசார் கடும் சோதனைக்கு பின்னரே அலுவலகத்திற்கு உள்ளே அனுமதித்தனர். அப்பொழுது அங்கு வந்த முதியவர் ஒருவரை சோதனை செய்தபோது அவர் வைத்திருந்த கைப்பையில் பல்வேறு கோரிக்கை மனுக்கள் மற்றும் மருத்துவ ஆவணங்களுடன் பாட்டிலில் மண்ணெண்ணெய் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மண்ணெண்ணையை பாதுகாப்பாக அப்புறப்படுத்திய போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் கூறியதாவது
சீர்காழி விளந்திடசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் அப்துல்வஹாப் -72. இவர் தனது 1 மகள் மற்றும் 2 மகன்களுக்கு திருமணம் செய்து வைத்த நிலையில் தொடர்ந்து தனது சகோதர்கள் உதவி மற்றும் தனது உழைப்பால் கிடைத்த வருமானம் மற்றும் வங்கி கடன் பெற்று வீட்டுமனை வாங்கி இரண்டு அடுக்கு மாடி வீடு கட்டியுள்ளார். தனது மகன்கள் தன்னை கவனித்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் அந்த வீட்டை தனது மகன்களுக்கு ஹிப்பா செட்டில்மெண்ட் எழுதி கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து அங்கு இருந்த காலி இடத்தில் அப்துல்வஹாப் தனக்கு ஓர் கூறை வீடு கட்ட முயன்ற போது அதனை தடுத்த அவரது மகன்கள் அந்த இடம் எங்களுக்கு சொந்தமானது. இதில் வீடுகட்ட கூடாது என தெரிவித்துள்ளனர். இதனால் அப்துல்வகாப் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அவரது மனைவி இறந்து விட்டாதாலும் பல்வேறு உடல் உபாதைகளால் சிகிச்சை பெற்று வருவதாலும் வயது முதிர்வு காரணமாக தன்னை பராமரிக்க மனைவி வழி உறவு பெண்ணை மறுமணம் செய்துள்ளார். தொடர்ந்து சிகிச்சை பெறுவதால் போதிய வருமானம் இல்லாதலும் தனது இடத்தை மீட்டு தருமாறு 25.11.2025 அன்று மனுநீதி நாள் முகாமில் மனு அளித்துள்ளார். அதன்படி 11.05.2025 அன்று மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின்படியும் 2007 விதியின் படியும் எனக்கு ஆதரவாக ஆணையிட்டனர். அதன்படி அங்கு சென்ற போது எனது மகன்கள் மேல் முறையீடு செய்துள்ளோம் இங்கு வரக்கூடாது என என்னை மிரட்டியதால் வயது முதிர்வு காரணமாக நான் திரும்பி வந்து விட்டேன்.
நான் சுகர்,பிரஸர், மூட்டுவலி, கண்பார்வை குறைபாடு என தொடர் சிகிச்சை பெற்று வரும் சூழலில் மருத்துவ சிகிச்சைக்கு செலவு செய்ய முடியாமலும் வீட்டு வாடகை கொடுக்க முடியாமலும் தவித்து வருகிறேன். எனவே எனது உடல் நிலை கருதி என்னை கவனித்துக்கொள்ளாத எனது மகன்களுக்கு நான் செய்து கொடுத்த ஹிப்பா செட்டில்மெண்டை ரத்து செய்து வீட்டை தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அந்த வீட்டின் வாடகை மூலம் கிடைக்கும் தொகையை கொண்டு தனது மருத்துவ சிகிச்சையையும் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றி கொள்ள முடியும் எனவும் தனது மனுவில் கூறியுள்ளார். இதனை செய்ய முடியாத நிலையில் நான் ஏன் அடுத்தவருக்கு பாரமாக வாழவேண்டும் நானே தற்கொலை செய்து கொள்கிறேன் என தற்கொலை முயற்சிக்காக தனது கைப்பையில் மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்துள்ளார். ஆட்சியர் அலுவலக வாயிலில் போலிசார் தீவிர சோதனை செய்த போது அவர் தற்கொலை முயற்சிக்காக வந்தது கண்டறியப்பட்டு அசம்பாவிதம் தவிற்கப்பட்டது. அவரது மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் உடனே நடவடிக்கை மேற்கொள்ள துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Exit mobile version