சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றிருந்த இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா, தனது குழுவினருடன் பூமிக்கு புறப்பட்டார்.

அமெரிக்காவில் உள்ள ஆக்ஸியம் ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம், நாசா, இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமையுடன் இணைந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தில் கடந்த ஜூன் 25 ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்துக்கு 4 விண்வெளி வீரர்களை அனுப்பியது.
இதில், இந்திய விமானப் படை வீரர் சுபான்ஷூ சுக்லா, அமெரிக்காவின் பெக்கி விட்சன் ஹங்கேரியின் திபோர் கபு மற்றும் போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.