சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இன்று வெளிவந்துள்ள கூலி திரைப்படத்தை காண,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள திரையரங்கில் ரசிகர்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து பட்டாசு வெடித்து கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, ஆமிர் கான் உள்ளிட்டோர் நடித்துள்ள கூலி திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியானது.
ரஜினிகாந்த் திரையுலகிற்கு வந்து ஐம்பதாண்டுகள் நிறைவடையும் நாளில் இந்தத் திரைப்படம் வெளியாவது, அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
கூலி படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதி மூன்று திரையரங்குகளில் கூலி திரைப்படம் வெளியானது இந்நிலையில் நாகர்கோவில் பயோனியர் திரையரங்கில் ரஜினி ரசிகர்கள் கேக் வெட்டி பால் அபிஷேகம் செய்து பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தை தொடங்கினர். முதியவர் முதல் இளைஞர்கள் வரை திரைப்படத்தை காண ஆர்வமாக திரையரங்கிற்கு வந்து படத்தை பார்த்து வருகின்றனர்.