திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது..
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற கோரி கடந்த ஆண்டு பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து நீதிமன்ற வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது புதிதாக பொறுப்பேற்ற தமிழக வெற்றிக் கழக அமைச்சர் நிர்மல் குமார் கடந்த ஆட்சி காலத்தில் பின்பற்றப்பட்ட நிலையே தற்போதும் தொடரும் என பேட்டி அளித்ததற்கு இந்து முன்னணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. தூய சக்தி என சொல்லி வாக்குகளை பெற்று ஆட்சி அமைத்த ஜோசப் விஜய் திருபரங்குன்றம் விவகாரத்தில் பழைய நிலைய தொடரும் என்று கூறினால் ஏற்கனவே இருந்த திமுகவை போல நாங்களும் இருப்போம் என்று சொல்வது எங்களுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு வரும் திருக்கார்த்திகை என்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஐம்பதுக்கு மேற்பட்ட இந்து முன்னணியினர் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.















