தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஸ்டாப் கரப்ஷன் தொழிற்சங்க பேரவை 5ம் ஆண்டு பேரவை கூட்டம் நாகப்பட்டினத்தில் நடந்தது.
துணைத்தலைவர் ராஜா தலைமை வகித்தார். துணைத்தலைவர் விஜயகுமார் வரவேற்றார். துணைச்செயலாளர் முனியப்பன், துணைத்தலைவர் லிங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் மீனாட்சிசுந்தரம் ஆண்டறிக்கை வாசித்தார்.
அச்சங்கத்தின் கவுரவ தலைவர் மற்றும் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்க மாநில தலைவர் ஆனந்தகுமார், பேரவை பொதுச்செயலாளர் காமராஜ், பேரவை இணை பொதுச்செயலாளர் கோதண்டன், செயல் தலைவர் அன்பழகன், இந்துஸ்தான் மஸ்தூர் சங்கத்தின் பேரவைச் செயலாளர் முருகேசன், தமிழ்நாடு தமிழகமக மக்கள் முன்னேற்ற கழக அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிலாளர் பேரவையின் பேரவை பொருளாளர் சசிக்குமார் ஆகியோர் பேசினர்.
அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நேர்மையாக நிரப்ப வேண்டும். மதுரை ஆர்ப்பாளையம் பகுதியில் ஓட்டுநரை காலனியால் தாக்கிய உதவி மேலாளர் தாக்கியுள்ளார். இது போன்ற சம்பவம் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க அனைவரும் உரிய அறிவுரை வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற 9500 மூத்தகுடிமக்களுக்கு உடனே அகவிலைப்படி வழங்க வேண்டும். விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்குவது போல் போக்குவரத்து கழகங்களில் விருப்பு ஓய்வு பெறும் பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும். விபத்து குறித்து ஆய்வு செய்ய நிர்வாகம் கமிட்டி அமைக்க வேண்டும். இந்த கமிட்டியில் தொழிற்சங்க நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். போக்குவரத்து கழகங்களை தனியார்மயமாக்கும் போக்கை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.













