கொளத்தூர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகிய முக்கிய பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என 200க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக கட்சியில் இணைந்து 10க்கும் மேற்பட்ட இடங்களில் த.வெ.க.கட்சியின் கொடியேற்றினர் !
சென்னை கொளத்தூர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய பொருப்பாளர் ஜமால் முகமத் என்பவர் தலைமையில் கொளத்தூர் ஆறுமுகத்துடன் இணைந்து 200க்கும் மேற்ப்பட்ட B.S.P.கட்சியில் இருந்து வெளியேறி கட்சி தொண்டர்கள் ஒன்றிணைந்து
த.வெ.க. கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.டி.சி. தணிகா ,கொளத்தூர் பகுதி செயலாளர் ராஜா முன்னிலையில்
இணைந்தனர்
மேலும் கொளத்தூர் தொகுதியில் உள்ள
( 1) சென்னை பெரம்பூர் பேருந்து நிலையம் அருகே சுப்பிரமணியன் தோட்டம் 67, வார்டு மற்றும் (2) பெரம்பூர் மதுரைசாமி மடம் நகர்
(3) மூலக்கடை கொல்லத் தோட்டம் 70 வது வார்டு ,(4) திருவிக நகர்
68, வட்டம் கே.சி கார்டன், ஆகிய பல பகுதிகளிலுக்கு சென்று த.வெ.க.கட்சியினர்
டாக்டர் அம்பேத்கர் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு
பின்னர் டாக்டர் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு முன்பு த.வெ.க கட்சியின் தொண்டர்கள் குவிந்து டாக்டர் அம்பேத்கர் வாழ்க, வேலுநாச்சியார் வாழ்க ,தந்தை பெரியார் வாழ்க, காமராஜர் வாழ்க என கோசமிட்டபடி
த.வெ.க .கட்சியின் நாளைய முதல்வர் தளபதி விஜய் வாழ்க என உற்சாகத்துடன் கோஷமிட்டனர்
மேலும் சுமார் 10 தெருக்களில் த.வெ.கட்சி தொண்டர்கள் ஒன்றிணைந்தபடி த.வெ.க .கட்சியின் கொடியை ஏற்றியதோடு அனைத்து இடங்களிலும்
பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், மாணவ,மாணவிகளுக்கு பயன்பெறும் வகையில் நோட்டு புத்தகங்கள் மற்றும் ஜாமென்ட்ரி பாக்ஸ் ,பெண்களுக்கு சேலைகள் ஆகியவை இலவசமாக வழங்கினர்
மேலும் B.S.P. கட்சியின் முக்கிய பொறுப்பாளரான ஜமால் முகமது என்பவர் கடந்த தேர்தலில் C.M.திமுக ஸ்டாலினுக்கு எதிராக போட்டிட்டார்
மேலும் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்த
கொளத்தூர் M ஆறுமுகம் , ஆர் மகேஷ்( எ) பிரகாஷ் ,
மு. இதய மணி
வி .பிரேம்குமார்
எம் .பழனி மு . ஸ்ரீதர், கொல்லம் தோட்டம் பாலாஜி, D.பிரபுலால், B.அருண்,எம் அபூபக்கர், Mjs.காஜா மைய்தீன், நிஜாம் ,பஷீர் அகமத்,
மேலும் பல தொண்டர்கள் இணைந்தனர்
என்பது குறிப்பிடத்தக்கது
