திருப்பத்தூர் தனியார் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளை கட்டிப்போட்ட திரை இசை. தமிழ் பாரம்பரிய இசைக்கு நடனமாடி நம் மாணவிகளின் சிந்தனையை திசை திருப்பிய வெளிநாட்டு மாணவிகள். பாரம்பரிய அரிசியில் பொங்கல் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகளை மாணவ மாணவிகளுக்கு நிணைவூட்டிய கல்லூரி நிர்வாகம்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் இயங்கும் அரசு நிதி உதவி பெறும் தனியார் தூய நெஞ்சக் கல்லூரியில் தமிழர் பண்டிகையான பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரியில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை மற்றும் புடவை அணிந்து வந்த நிலையில் முன்னதாக அவர்களுக்கு தமிழர்களின் பாரம்பரிய உணவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பின்பு இயற்கை அரிசி வகையில் ஒன்றான தூய மல்லி அரிசியியில் பொங்கல் வைத்து அணைவரும் மகிழ்ந்தனர்.
இதன் தொடர்ச்சியாக மாணவ மாணவிகளின் மன உளைச்சல்களை போக்கும் விதமாக திரை இசை பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு ஒட்டு மொத்த மாணவ மாணவிகள் நடனமாடிக் கொண்டிருந்த போது இதே கல்லூரியில் பயிலும் சைனா, தாய்லாந்து, ஆப்பிரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட வெளி நாட்டு மாணவ மாணவிகள் தமிழர்களின் பாரம்பரிய இசைக்கு நடனமாடி அணைத்து மாணவ மாணவிகளின் கவனத்தை திசை திருப்பி அசத்தினர். தொடர்ந்து மணவ மாணவிகளுக்கு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான கபடி போட்டி தண்டால் உடற்பயிற்சி போட்டி போன்ற பல விளையாட்டுகள் நடத்தப்பட்டு வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் உட்பட அணைத்து பொறுப்பாளர்கள் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டனர்.
















