சீர்காழியில் ஆடிப்பூர தேரோட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டநாதர் கோவில் அமைந்துள்ளது இங்கு சிவபெருமான் மூன்று நிலைகளில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். திருஞானசம்பந்தர் தனது மூன்றாவது வயதில் தோருடைய செடியின் என்ற முதல் தேவார பதிகத்தை பாடிய தலமாகும். இந்த கோவிலில் ஆடிப்பூர உற்சவம் கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது ஒன்பதாம் திருநாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது தேரோட்டத்தை முன்னிட்டு திருநிலை நாயகி அம்பாள் மற்றும் விநாயகர் தேரில் எழுந்தருள திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். வழிநெருகிலும் பக்தர்கள் அம்பாளுக்கு தீபா ஆரத்தி எடுத்தும் அர்ச்சனைகள் செய்தும் வழிபாடு நடத்தினர் தொடர்ந்து தேர் நான்கு வீதிகளையும் வலம் வந்து நிலையை அடைந்தது.

Exit mobile version