மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பதாகை ஏந்தி கண்டனம் தெரிவித்த நபரால் பரபரப்பு

தனது இடத்திற்கு அரசு அதிகாரி ஒருவர் போலி பட்டா பெற்று இடத்தை விற்பனை செய்ததை ரத்து செய்யக்கோரி 200க்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பதாகை ஏந்தி கண்டனம் தெரிவித்த நபரால் பரபரப்பு:-


மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த ஆணைமேலகரம் மெயின் ரோட்டில் வசித்து வரும் ஜெரால்டு ரூபன் என்பவர் தனது இடத்திற்கு அரசு அதிகாரி ஒருவர் போலி பட்டா பெற்று விற்பனை செய்ததை ரத்து செய்யக்கோரி 200க்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஃப்ளக்ஸ் பதாகை ஏந்தி கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து ஜெரால்டு ரூபன் கூறியது

தனது பக்கத்து வீட்டில் வசித்தவரும் தற்போது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் ஊராட்சிகள் தணிக்கை கண்காணிப்பாளராக பணியாற்றும் சசிகுமார் என்பவர் தனது வீட்டோடு உள்ள ஒருபகுதியான 700 சதுர அடி இடத்தை எந்தவித ஆவணங்களும் உரிமையும் இல்லாமல் போலி பட்டா வாங்கி வைத்துக்கொண்டு அந்த இடத்தை விற்பனை செய்து விட்டதாகவும், தன் இடத்தை மீட்டு தரும்படி கோரிக்கை விடுத்து சார்பதிவாளர் அலுவலகம் வருவாய்துறை மாவட்ட ஆட்சியர், லஞ்ச ஒழிப்புதுறை என முதல்வரின் தனிபிரிவு வரை இரண்டரை ஆண்டுகளாக 200க்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தப் பிரச்சனை தொடர்பாக அப்போது பணியில் இருந்த காளியம்மாள் என்ற நில அலுவலர் இடத்தை அளந்து திருத்த பத்திரம் செய்யலாம் என்று தனக்கு சான்று கொடுத்துவிட்டு சசிகுமாருக்கு தனக்கு அளித்த சான்றை மறுத்து விற்பனை செய்வதற்கு தடை இல்லை என்று சான்று வழங்கிய நிலையில் சார் பதிவாளர் அலுவலகத்தில் தடங்கள் மனு அளித்தேன், ஆனால் இடத்தை கலஆய்வு செய்யாமல் பத்திரப்பதிவு செய்து அன்றைய தினமே பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை மீட்பதற்கு அனைத்து துறை அதிகாரிகள் முதலமைச்சர் தனிப்பிரிவு வரை மனு அளித்து இரண்டரை வருடங்களாக போராடிவருவதாகவும் இதுவரை தனக்கு நீதி வழங்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Exit mobile version