பட்சம் என்றால் 15 நாள்கள் கொண்ட கால அளவைக் குறிக்கும். ‘மஹாளய பட்சம்’ என்பது ஆவணி மாதப் பௌர்ணமிக்குப் பின் வரும் தேய்பிறை 15 நாள்களைக் குறிக்கும். இந்தப் பதினைந்து நாள்களும், முன்னோர்கள் பித்ரு லோகத்திலிருந்து பூலோகம் வந்து நம்மிடையே தங்கும் புண்ணிய தினங்களாகக் கருதப்படுகின்றன. எனவே இந்த நாள்களில் முன்னோர் வழிபாடுதான் பிரதானம்.
மகாளய பட்சம் என்பது புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும். முன்னோர்கள் வழிபாடுகளுக்கு மிக சிறந்த காலமாக மகாளய பட்சம் ஆகும். இந்த ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி மகாளய அமாவாசை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த அற்புத காலத்தில் நாம் முன்னோர்களை வழிபடுவது சிறந்தது.
இந்த நாட்களை பயன்படுத்திக்கொண்டு பித்ருக்களுக்குரிய தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றை தவறாமல் செய்யவேண்டும். தர்ப்பணத்தில் விடுகின்ற எள் மற்றும் தண்ணீரை ஸ்வேதா தேவி என்பவள் மிக எளிதாக பித்ருக்களிடம் கொண்டு சேர்த்துவிடுகிறாள். இந்த நாட்களில் தினமும் முன்னோர்களை வழிபடுவது நன்மையைத் தரும். தாயார் தகப்பனார் இல்லாதவர்கள் தினமும் தர்ப்பணம் செய்வது நல்லது. மற்றவர்கள் தினமும் காலையில் குளித்தவுடன் முன்னோர்களை வணங்கி விட்டு அதன் பின் வேலைகளை தொடங்குவது நல்லது.

மரங்களில் மிக புனிதமானதாகக் கருதப்படுவது அரச மரம். அரச மரத்தடியில் அமர்ந்து காட்சி தரக்கூடிய விநாயகரை, இந்த தினத்தில் அரச மரத்தை சுற்றிவந்து கணபதியை வணங்கி வருவது புண்ணியத்தைத் தரும். இப்படி செய்வதால் முன்னோர்களின் ஆசி கிடைப்பதோடு, நம் உடல் நலமும் சிறக்கும். நீண்ட நாள் வாழ முடியும்.
செப்டம்பர் 21 ஞாயிற்றுக்கிழமை சர்வ மகாளய அமாவாசை. மறைந்த முன்னோர்கள் அனைவருக்கும் தர்ப்பணம் தர ஏற்ற நாளாகும்.
அற்புதமான மகாளய பட்ச காலத்திலும், அமாவாசை நாட்களில் காகம், எறும்பு, பசு, நாய், பூனை மற்றும் அந்தணர்களுக்கு உணவளித்து அவர்களின் வயிற்றை நிறைத்தால் நம்முடைய பாவங்கள் நீங்குவதோடு, நிகரில்லா இறைவன், முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும். மகாளய அமாவாசை மட்டுமல்லாமல், மகாளய பட்சம் தினத்தில் கருப்பு உளுந்து, கருப்பு எள், உப்பு, உடைகள், வெல்லம், பார்லி போன்ற உணவு பொருட்களை தானமாக அளித்தால் மிகவும் நல்லது. இதனால் நம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.
பித்ருக்கள் மனநிறைவு பெற்று நம்மை ஆசீர்வதிப்பதால், முற்பிறவித் தவறுகளால் இப்பிறவியில் நமக்கு ஏற்படும் அல்லது ஏற்படக்கூடிய கடன் தொல்லைகள், நோய்கள், குடும்பப் பிரச்னைகள், குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்தில் தடங்கல்கள், செய்வினை தோ~ங்கள், நியாயமில்லாமல் பிறரால் கொடுமைக்கு ஆளாகுதல், புத்திரப்பேறின்மை, கணவன்- மனைவியரிடையே அன்யோன்யம் குறைதல், கணவன்-மனைவி பிரிந்திருத்தல், உத்தியோகத்தில் தொல்லைகள், மனநலக்குறைவு, குடும்பத்தில் ஏற்படும்

தற்கொலைகள், அகால மரணங்கள், காரணமற்ற மனபயம் ஆகிய மிகக்கொடிய துன்பங்களும்கூட அடியோடு நீங்கிவிடும் என்பது ஐதீகம். மஹாளய பட்சம் ஆரம்ப தினத்தன்று பித்ரு தேவதைகள், சூரிய பகவான், தர்மராஜன் ஆகியோரின் அனுமதி பெற்று பித்ருக்கள், ஸ்வர்ண மயமான விமானங்களில் ஏறி நம்மிடம்
வருகிறார்கள். இந்த விமானங்கள் சூரியனின் ஒளிக்கற்றைகள் மூலம் பறந்து வருகின்றன. இவ்விதம் பித்ருக்கள் பூமியில் இறங்கும்போது அவர்களைத் தேவர்களின் உலகிலுள்ள ஆசீர்வதிக்கின்றனர். தேவர்கள் வணங்குகின்றனர்.
பித்ருக்கள் பரம பவித்திரமானவர்கள். தங்களது ஜீவித காலத்தில் செய்துள்ள புண்ணிய செயல்களால் புடமிட்ட தங்கம்போல் ஒளிபொருந்தியவர்களாகப் பித்ருக்கள் பிரகாசிக்கிறார்கள் எனப் புராதன நூல்கள் போற்றிப் புகழ்கின்றன. மீண்டும், தங்கள் குழந்தைகளைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியதால், அவர்கள் பேருவகை அடைவதாக கருடபுராணம் கூறுகிறது. அவர்கள் நம்மிடையே வந்து நம்முடன் தங்கும் இந்தப் பதினைந்து புனித நாட்களும் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்,
நமக்குப் பல தருணங்களில் அன்பும், இரக்கமும் காட்டி உதவிய பித்ருக்களுக்கும் இந்த மஹாளய பட்சத்தில் நினைவுகூர்ந்து திதி செய்யலாம்.
இவர்களுக்கு ‘காருண்ய பித்ருக்கள்’ என்று பெயர். அதாவது நாம் துன்பப்படும்போது நம்மீது கருணைகாட்டி உதவிய பித்ருக்கள் என்று பொருள்.
இவ்வாறு, சிரத்தையுடன் மஹாளய பட்சத்தை குடும்பங்களில் எத்தகைய துன்பமானாலும் நொடியில் தீர்ந்து அந்தக் குடும்பம் செழிப்பதை அனுபவத்தில் காணலாம்.