சித்தர்காடு பகுதியில் இயங்கிவரும் நவீன அரிசி ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்

பகுதியில் இயங்கிவரும் நவீன அரிசி ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் சுடுகாட்டில் குடியேறி உண்டு உறங்கும் போராட்டம்:- சுடுகாட்டிலேயே சமைத்து, சாப்பிட்டு, பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 200 பேர் நீதிமன்ற தீர்ப்பாணையை அமல்படுத்த வலியுறுத்தியும், மருத்துவக் குழுவினர் ஆய்வுசெய்து உயிரிழந்த மற்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கவும், நீதிமன்ற தீர்ப்பை மீறி ஆலையை இயக்கிய நிர்வாகத்தின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தல்:-
மயிலாடுதுறை சித்தர்காடு பகுதியில் 1981-ஆம் ஆண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான நவீன அரிசி ஆலை தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. நாளொன்றுக்கு சுமார் 100 டன் நெல் அரவை செய்யும் இந்த ஆலையில் நெல்லை அரைக்கும்போது உமித்துகள், கரித்துகள்களாக மாறி அந்த பகுதி முழுவதும் காற்றில் கலப்பதால் சித்தர்காடு, மாப்படுகை, சோழம்பேட்டை, மூவலூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்களுக்கு சுவாசக்கோளாறு, ஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட நோய் பாதிப்பு ஏற்பட்டு 18 பேர் உயிரிழந்துள்ளதாக குற்றம்சாட்டி பொதுமக்கள் ஆலையை மூடக்கோரி பலகட்ட போராட்டங்கள் நடத்தியுள்ளனர். இந்நிலையில், அப்பகுதியில் வசிக்கும் வசந்த் என்பவர் தொடுத்த வழக்கில், கடந்த 2010-ஆம் ஆண்டில் நவீன அரிசி ஆலையை மூடுவதற்கு மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியுடன் தொடர்ந்து ஆலை இயக்கப்பட்டு வருவதை கண்டித்து ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென்று கிராம மக்கள் இன்று சுடுகாட்டில் குடியேறி உண்டு-உறங்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்ற தீர்ப்பானையின்படி நவீன அரிசி ஆலையை நிரந்தரமாக மூடி மின் இணைப்பை துண்டிக்கவும் மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்து உயிரிழந்த மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கவும், நீதிமன்ற தீர்ப்பை மீறி ஆலைய இயக்கிய நிர்வாகத்தின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுடுகாட்டிலேயே சமைத்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியபோது மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் காற்று மற்றும் நீர் பகுப்பாய்வு செய்து பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறத்தல் இல்லாதவாறு ஆலையை இயக்கிடவும், மேலும் அனைத்து காற்று தரக்கட்டுப்பாடு கருவிகள் முறையாக பொருத்திய பிறகும் காற்று பகுப்பாய்வு முடிவுகளில் மாற்றம் இல்லாதிருப்பின் மேல்நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் மூலம் பரிந்துரைக்கப்படும் என்று வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்த நிலையில் அமைதி பேச்சுவார்த்தை உத்தரவை மதிக்காமல் ஆலையை தொடர்ந்து இஙக்கி வரும் ஆலை நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் 200-க்கு மேற்பட்டோர் மீண்டும் சுடுகாட்டில் குடியேறி உண்டு உறங்கும் போராட்டத்தை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Exit mobile version