தரங்கம்பாடி அருகே பொன்செய் கிராமத்தில் உள்ள ஆலடி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா; பக்தர்கள் குழந்தைகளை தூக்கிக் கொண்டு தீக்குழியில் நடந்து சென்றும் தீமித்தது காண்போரை பக்தி பரவசத்தில் ஆழ்தியது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கிடாரண்கொண்டான் ஊராட்சி பொன்செய் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலடி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. காவிரி ஆற்றங்கரையில் சிறப்பு பூஜைகள் செய்து சக்தி கரகம் புறப்பாடாகி காப்பு கட்டி விரதம் இருந்த மஞ்சள் உடை உடுத்திய ஏராளமான பக்தர்கள், அலகு காவடி எடுத்த பக்தர்கள் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அங்கு கோவிலின் முன்பு அமைக்கப்பட்டுள்ள தீக்குழியில் சக்தி கரகம் இறங்கியதை அடுத்து விரதமிருந்த பக்தர்கள் மற்றும் அலகு காவடி எடுத்த பக்தர்கள் தீ மிதித்தது தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். ஏராளமானோர் குழந்தைகளை தூக்கிக் கொண்டும் தீக்குழியில் நடந்து சென்றும் தீமித்தது காண்போரை பக்தி பரவசத்தில் ஆழ்தியது. எங்கும் காணக் கிடைக்காத கழுஉடையான் உற்சவர் சுவாமி கோவிலை சுற்றி வந்து கோவிலின் முகப்பில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
