தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட கிள்ளியூர்,மாத்தூர்,காழியப்பநல்லூர் ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் கிள்ளியூர் ஊராட்சியில் நடைபெற்றது. பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதாமுருகன் முகாமினை தொடங்கி வைத்து மனுக்களை பெற்று மனு கொடுக்க வந்த பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கினார்.
தமிழ்நாட்டில் மக்களின் அனைத்து விதமான தேவைகளை அனைத்து துறை அலுவலர்கள் அவர்களது இருப்பிடங்களுக்கே சென்று, கேட்டறிந்து பூர்த்தி செய்யும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜூலை-15 அன்று தொடங்கிவைத்தார் அதனைத் தொடர்ந்து நகர்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் முகாம் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட கிள்ளியூர்,மாத்தூர்,காழியப்பநல்லூர் ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் கிள்ளியூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதாமுருகன் கலந்துகொண்டு முகாமினை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் அணுக்களை பெற்றுக் கொண்டார் மேலும் முகாமிற்கு மனு கொடுக்க வந்த 500க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் மதிய உணவு வழங்கினார். மேலும் இந்த முகாமில் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல் , மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் உள்ளிட்ட 14 துறைகள் சார்பில 46 வகை சேவைகளை மக்கள் ஒரே இடத்தில் பெரும் வகையில் துறைகள் சார்பாக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் சுமார் 574மனுக்கள் பெறப்பட்டன.

