மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்திட வேண்டும், தனியார் மயமாக்குதலை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு
தீப்பந்தம் ஏத்தி போராட்டம்.
படக்காட்சிகள்: நெடுஞ்சாலைத் துறை அலுவலகம், சாலை பணியாளர்கள், தீ பந்தம், கண்டன முழக்கம்.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை
சாலை பணியாளர்களின் 41 மாத பணி காலத்தை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீப்பந்தம் ஏந்தி தர்ணா போராட்டத்தை ஈடுபட்டனர். நாகப்பட்டினம் நெடுஞ்சாலைத்துறை போட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்தில், சாலை பணியாளர்களின் 41 மாத பணி காலத்தை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி முறைப்படுத்த வேண்டும் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்யக்கூடாது, உயிரிழந்த சாலை பணியாளர்களின் குடும்பத்துக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும், மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழக அரசை கண்டித்து தீப்பந்தம் கையில் ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். மாவட்டத் தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நாகை மாவட்டம் முழுவதும் உள்ள நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
