உலகின் முதல் YouTube பில்லியனர் யார் தெரியுமா ?

வாஷிங்டன்: உலகத்தில் YouTube-ல் அதிக சந்தாதாரர்களைக் கொண்ட MrBeast (உண்மைப் பெயர்: ஜிம்மி டொனால்ட்சன்), 27-வது வயதில் அதிகாரப்பூர்வமாக பில்லியனர்ஸ் பட்டியலில் இணைந்துள்ளார்.

1998-ம் ஆண்டு மே 7-ஆம் தேதி அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் பிறந்த ஜிம்மி, 12-வது வயதில் ‘MrBeast6000’ என்ற பெயரில் தனது YouTube பயணத்தைத் தொடங்கினார். ஆரம்ப காலங்களில் வீடியோ கேம் விளக்கங்கள், சவால் அடிப்படையிலான வீடியோக்கள், நகைச்சுவை உள்ளடக்கங்கள் மூலம் பிரபலமானார்.

2017-ல் வெளியிட்ட “100,000 வரை எண்ணும்” வீடியோவானது வைரலாக, அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின், $1,000 வழங்கும் வீடியோவிலிருந்து, $1 மில்லியன் பரிசு போட்டிகள், மற்றும் சமூக நலத்துக்கான முயற்சிகள் மூலம் MrBeast உலகளாவிய ரசிகர்களை பெற்றார்.

தற்போது, MrBeast, Beast Gaming, Beast Reacts, MrBeast Philanthropy என நான்கு பிரபலமான YouTube சேனல்கள் உடைய இவர், மொத்தமாக 415 மில்லியனுக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களைக் கொண்டுள்ளார். இவரது பிரதான சேனல் மட்டும் 270 மில்லியன் சந்தாதாரர்களுடன் உலக சாதனை படைத்துள்ளது.

MrBeast, YouTube விளம்பர வருமானம், MrBeast Burger உணவகத் தொழில், ஸ்பான்சர் ஒப்பந்தங்கள் மற்றும் அவரது மெர்சண்டைஸ் விற்பனைகளின் மூலம் மாதம் சுமார் $5.4 மில்லியன் வருமானம் ஈட்டுகிறார். 2023-ல் $223 மில்லியன் வருவாயும், 2024-ல் $700 மில்லியனை எட்டும் அளவுக்கான வளர்ச்சியும் இவரது பில்லியனராகும் நிலையை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த சாதனையைத் தொடர்ந்து, Time பத்திரிகை இவரை “உலகின் 100 செல்வாக்கு மிக்க நபர்கள்” பட்டியலில் சேர்த்துள்ளது. மேலும், Forbes 2024 பட்டியலில் “அதிகம் சம்பாதிக்கும் YouTuber” என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.

பில்லியனராக உருவெடுத்த YouTube நட்சத்திரம் – MrBeast, இளைஞர்களுக்கு தொழில்முனைவோராக உள்ளேரும் சக்திவாய்ந்த உருவாக திகழ்கிறார்.

Exit mobile version