தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தவெக வெற்றி பெற்றதை தொடர்ந்து மயிலாடுதுறையில் இளைஞர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வெடி வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். :-
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வென்று பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்துள்ளது. இதனிடையே பல்வேறு இடங்களில் தவெக தலைவர் விஜய் வெற்றிவாகை சூடியதை மக்களும் அக்கட்சி நிர்வாகிகளும் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் இளைஞர்கள் மற்றும் நிர்வாகிகள் வெடி வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து விசில் அடித்தபடி சாலையில் சென்று தவெக தவெக என கோஷங்களை எழுப்பி தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற விஜய்க்கு கொண்டாட்டத்தின் மூலம் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.











