இளம் பெண்ணுக்கு கை வலி… மருத்துவர் கைது..! கதை அப்புடியா..!

கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள வட்டேக்காடு பகுதியை சேர்ந்தவர் செபாஸ்டியன். 47 வயதான இவர் கொடகரை என்கிற இடத்தில், நாட்டு மருத்துவ சிகிச்சை மையம் நடத்தி வந்துள்ளார். சென்ற 15ம் தேதி அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், தனது வலது கை வலிக்கு மருத்துவ சிகிச்சை பெற அங்கு வந்துள்ளார்.

கையை கழுவிவிடுவதற்கு பெண் ஊழியர்கள் அங்கு இருந்தபோதிலும், அவர்களை வெளியே அனுப்பிவிட்டு மருத்துவ சிகிச்சை கொடுப்பதுபோல் அறைக்குள் நுழைந்த செபாஸ்டியன், அந்த பெண்ணிடம் அத்துமீறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த விஷயம் குறித்து வெளியே சொன்னால் அந்த பெண்ணை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார் செபாஸ்டியன். அங்கிருந்து வீடு திரும்பிய பெண், இரண்டு நாட்களுக்கு பிறகு நடந்த சம்பவத்தை உறவினர்களிடம் கூறி இருக்கிறார்.

இதனை அடுத்து, கொடகரை போலீசாரிடம் பெண்ணின் தரப்பு புகார் அளித்து உள்ளனர். இன்ஸ்பெக்டர் தாஸ் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, செபாஸ்டியனை நேற்று கைது செய்து உள்ளார்.

Exit mobile version