குமரி மாவட்டம் பெரியகாடு கடற்கரை கிராமத்தில் உலக மீனவர் தின கொண்டாட்டம். படகுகளை அர்ச்சித்து கடலுக்கு மலர் தூவி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட மீனவர்கள்.
ஆண்டுதோறும் நவம்பர் 21ம் தேதி மீனவர் தினமாக கொண்டாட படுகிறது. குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையுள்ள 48 மீனவ கிராமங்களில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேரடியாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடல் அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், மீனவர்களின் குறைகள் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும் ஆண்டுதோறும் நவம்பர் 21ம் தேதி உலக மீனவர் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று உலக மீனவர் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் பெரியகாடு கிராமத்தில் மீனவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டதுடன் படகுகளை அர்ச்சித்து கடல் அன்னைக்கு மலர் தூவி வழிபட்டனர். ஆழ் கடலில் மீன் பிடிக்க சென்று காணாமல் போகும் மீனவர்களை மீட்க ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் புயல் எச்சரிக்கை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் அவற்றை அறிந்து கொள்ள அதிதவீன கருவிகளை வழங்க அரசு முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்
